பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுதல் BEING LED OF THE HOLY SPIRIT 56-0219 ஞாயிற்றுக்கிழமை மாலை, பிப்ரவரி 19, 1956 கால்வரி டெம்பிள் சோல்ஸ் ஹார்பர் ( Calvary Temple Soul's Harbor), மினியாபோலிஸ், மினசோட்டா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுதல் (56-0219) இன்று மாலை ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இங்கு இருப்பதில்... மக்கள் நின்று கொண்டிருப்பதற்காக வருந்துகிறேன், எனவே நாங்கள் இந்த கூட்டத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக முடிக்க முயற்சிப்போம். இன்று எல்லா இடங்களிலும் கூட்டங்கள் நடந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன், மேலும் சபையில் இரண்டு மூன்று கூட்டங்கள் நடந்திருக்கலாம்... நான் இன்று உங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பைப் பார்த்தேன், அது மிகவும், மிக நன்றாக இருந்தது என்று நான் நினைத்தேன். நீங்கள் இப்போது திருப்தியடைந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், எனவே நாங்கள் சில நிமிடங்கள் பேசிவிட்டு, நேராக சுகமளிக்கும் கூட்டத்திற்குச் செல்லலாம், ஏனெனில் இந்த சுகமளிக்கும் கூட்டத்தின் வழியாக ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஒருவேளை அவர் தமது மகத்தான ஞானமுள்ள சித்தத்தின்படி அப்படிச் செய்யச் சித்தமானால். "இன்று ""லுக்"" ( Look) பத்திரிகையில் பில்லி கிரகம் குறித்து கொடுக்கப்பட்டிருந்த கட்டு ரையை வாசித்தபோது, நான் இந்தக் குறிப்பைச் சொல்ல விரும்பினேன். நீங்கள் அதைப் பார்க்கவோ அல்லது வாசிக்கவோ இல்லை என்றால், அது உண்மையில் ஒரு சிறந்த... நான் பில்லி கிரகத்தை நிச்சயமாகப் பாராட்டுகிறேன். ஆண்டவர் நம்முடைய சகோதரரை உபயோ கிக்கிறார், அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்து வருகிறார். நான்..." 2 இது அவருடைய சொந்த ஊர் மற்றும் அவருடைய அலுவலகத்தைச் சார்ந்தவர்களோ அல்லது யாரோ சிலர் இங்கு இருக்கலாம் (எனக்குத் தெரியாது). அவர்கள் அப்படி இங்கு இருந்தால், நான் அவருடைய சொந்த ஊரில் அல்லது அவருடைய அலுவலகம் இருக்கும் இடத்தில் இருக்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை, எங்கு இருந்தாலும் இதைச் சொல்வேன். தேவன் நம் சகோதரரை உபயோகிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். தேவன் இதைச் செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நம்மிடம் உள்ள அனைத்தினாலும், நம்முடைய ஜெபங்களாலும் நாம் அவரைத் தாங்க வேண்டும். கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. அந்த நபருக்கு அவர் சரியான பதிலைக் கொடுத்தார் என்று நான் நினைத்தேன், அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருந்தது. அவர் ஒரு புத்திசாலி மனிதர். ஆண்டவர் அவரை ஆசீர்வதிப்பாராக. சகோதரர் மூர் சற்று நேரத்திற்கு முன்பு என்னை அழைத்தார், அன்னா ஜீன், மற்றும் டான் ஆகியோர் கடந்த வாரம் கொரியாவிலோ அல்லது சீனாவிலோ, அவர்கள் இருக்கும் ஏதோ ஒரு இடத்தில் அவருடன் இருந்தார்கள் என்று கூறினார். சகோதரர் கிரகமுடன் இருந்த ஐக்கியத்தை அவர்கள் நிச்சயமாக மிகவும் அனுபவித்தார்கள். 3 இப்போது, எங்கள் அடுத்த கூட்டம் தெற்கு டகோட்டாவிலுள்ள சவுத்-சியோக்ஸ் ஃபால்ஸில் ( South-Sioux Falls) அடுத்த வாரம் தொடங்குகிறது. நாங்கள் புதன்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு இருக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து நாங்கள் செல்கிறோம். அடுத்த சில நாட்களில் விர்ஜீனியாவில் எங்கேயோ ஒரு காலை உணவு கூட்டத்தில் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பின்னர் அங்கிருந்து, ஓ, நேராக பழைய மெக்ஸிகோவிற்குள்ளும், மீண்டும் இங்கும், பின்னர் கனடாவிற்கும் செல்ல வேண்டும். இப்போது, அவர்கள் சொல்கிறார்கள்... திரு. மூர் இன்று என்னிடம் அவர்கள் இப்போது ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்கள். நான் சுவிட்சர்லாந்துக்கும், ஜெர்மனிக்கும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும், அங்கிருந்து தென்னாப் பிரிக்காவுக்கும், மீண்டும் டாங்கன்யிகாவுக்கும், அங்கிருந்து இந்தியாவுக்கும், மீண்டும் சீனா, ஜப்பான், மற்றும் மறுபுறம் வழியாக வரப்போகிறேன். அவர்கள் பயணத்திட்டத்தை வகுத்துவிட்டார்கள். எனவே, நீங்கள் பார்க்கிற படி, இது தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இருக்கிறது. 4 ஆனால் எனக்கு என் கூடாரம் கிடைக்கும் நாளுக்காக நான் நம்பிக்கையோடு, காத்துக் கொண்டிருக்கிறேன். எனது கூடாரத்தைப் பற்றி நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். அது எனக்கு எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது... நாம் வேதப்பகுதியை வாசிப்பதற்கு முன் சற்று பேசுவதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்... பத்திரிகையில் வந்த தரிசனத்தை எத்தனை பேர் வாசித்தீர்கள்? நீங்கள்... அதை வாசித் தீர்களா? நல்லது, அது மிக நன்று. அது—அது நான் பல வருடங்களாக ஜெபித்துக் கொண்டி ருந்த ஒன்று. சுகமளிக்கும் கூட்டங்களின் நேரத்தில் சரீர பெலன் இல்லாத காரணத்தினால், என் கூட்டங்களில் நான் உண்மையிலேயே செய்ய விரும்பும் காரியங்களையும், செய்யப்பட வேண்டும் என்று நினைக்கும் காரியங்களையும் என்னால் ஒருபோதும் செய்ய முடியவில்லை என்பது எனது கூட்டங்களில் உள்ள ஒரு விஷயமாகும். 5 தரிசனங்கள் உங்களைச் சிதைத்துப்போடும் ஒரு விஷயமாகும். அது... அது வேறு உலகில் வாழ்வது போன்றது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்து திடீரென்று விழித்து, பாதி தூக்கத்திலும் பாதி விழிப்பிலும் இருந்து, மீண்டும் மீண்டும் மீண்டும் அப்படி இருந்தால், அது உங்களுக்கு என்ன செய்யும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தானியேல் ஒரு தரிசனத்தைக் கண்டு, பல நாட்கள் தன் தலையில் கலக்கமடைந்திருந்ததை உங்களால் நினைக்க முடிகிறதா? (பார்க்கவும்), ஒரே ஒரு தரிசனம். அது... "ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன்பு அது என்னை வாழ்வின் முடிவிற்கே கொண்டு சென்றது, அவர்கள் என்னை மேயோ சகோதரர்களிடம் ( Mayo Brothers) அவசரமாகக் கொண்டு சென்றனர், ""நீங்கள் பிழைப்பதற்கும், இதிலிருந்து வெளியேறுவதற்கும் உலகத்தில் எந்த வாய்ப்பும் இல்லை (பார்க்கவும்)"" என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் தேவனின் கிருபை என்னை வெளியே கொண்டு வந்தது. நான் கவனமாக இருப்பேன் என்று அப்போது அவருக்கு வாக்குறுதி அளித்தேன்..." "இப்போது, ஜெப வரிசைகளில் நான் அதிக நபர்களிடம் செல்வதில்லை. இது குறித்து எனக்குப் பல விமர்சனங்கள் வந்துள்ளன. ""திரு. ராபர்ட்ஸ் மற்றும் பலர், திரு. ஆலன் மற்றும் அவர்கள் ஐநூறு பேருக்காக ஜெபிக்கும்போது நீங்கள் ஐந்து பேருக்காக மட்டுமே ஜெபிக் கிறீர்கள்"" என்று கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். சரி, ஆண்டவர் எனக்குச் சொன்ன வழியில்தான் நான் அதைச் செய்ய வேண்டும். அது..." 6 அல்லது, எனது ஊழியம் ஒவ்வொரு நபரையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது அல்ல, ஆனால் அது (பார்க்கவும்) ஒரு வரத்தின் அடையாளமாக அனைவருக்கும் கர்த்தராகிய இயேசுவைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகும், ஏனெனில்... அவர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை... கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது என் கைகள் அல்ல. திரு. ராபர்ட்ஸின் கைகளும் கணக்கில் வராது. அவர் மீதுள்ள உங்கள் கைகளே கணக்கில் வரும். "அதுதான்... அவரே அதைச் செய்கிறவர், ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் வேலையை முடித்துவிட்டார். நாம் செய்யக் கூடியது வார்த்தையின் மூலமாகவோ அல்லது அதன் முடிக்கப்பட்ட வேலையைப் பிரதிநிதித் துவப்படுத்தும் ஏதேனும் ஒரு வரத்தின் மூலமாகவோ அதைப் பிரசங்கிப்பது மட்டுமே. இந்தச் சபையின் போதகர், சகோதரர் கோர்டன் பீட்டர்சனை நான் பாராட்டுகிறேன். நான் இதுவரை சென்றதிலேயே மிகச்சிறந்த சபைகளில் ஒன்று உங்களுடையது என்று நான் நினைக்கிறேன். நான் உங்கள் மேடையில் இருப்பதற்காக இதைச் சொல்லவில்லை. என் மகன், இளம் டாக்டர் பிரான்ஹாம்... [சகோதரர் பிரான்ஹாம் மற்றும் சபையினர் சிரிக்கிறார்கள்] அவன் அதைக் கேட்கவில்லை என்று நம்புகிறேன். அவன் இனி எழும்பமாட்டான். அவன் வந்து, இன்று காலை தனது சாட்சியைப் பகிர்ந்தான்; அவன் சொன்னான், ""அப்பா, அவர்கள் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த வாலிபர் வகுப்புகளையும் மற்ற காரியங் களையும் வைத்திருக்கிறார்கள்."" அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் நான்... ஆண்டவர் இந்தக் கூட்டத்தில் பில்லியுடன் ஆண்டவர் மிகவும் இடைப்பட்டுக் கொண்டி ருக்கிறார். ஒரு நாள் அவன் சரியாகி, தொடர்ந்து வருவான் என்று நான் நம்புகிறேன். சரி, எப்படியும் நான் அப்படி நம்புகிறேன். அவன் கவனித்துக் கொண்டிருக்கலாம், அதனால் நான் இங்கேயே நிறுத்திக் கொள்வது நல்லது. அது..." 7 தரிசனம், அது... முடிந்தால் எட்டரை மணிக்கு என் நேரத்தைத் தொடங்க நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தரிசனம் இதோ. நான் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்... நான் பேசுவது உங்களுக்கு நன்றாகக் கேட்கிறதா? நான்... இதை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக வைத்தால் எப்படி இருக்கும். அது இப்போது பரவாயில்லையா? நன்றி. தரிசனம் இதுதான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரிசனம் தொடங்கியது... எனக்கு நினைவிருக்கும் முதல் தரிசனம், நான் அப்போதும் சிறிய நீண்ட அங்கி ( long dress) அணிந்திருந்தேன். அது உங்களுக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது, ஒரு சிறு பையன், அங்கி அணிந்திருந்தான். நாங்கள் கென்டக்கியின் மலைகளில் வளர்ந்தோம், நான்... சிறுவர்களும் சிறுமிகளும் பெரிய பிள்ளைகளாகும் வரை சிறிய அங்கிகளை அணிவார்கள். நான் அணிந்திருந்த அந்த அங்கி எனக்கு நினைவிருக்கிறது. அது ஒரு... 8 ஒரு பிரசங்கியார் சில பறவைகளைச் சுட்டுக் கொண்டிருந்தார், ஏழாவது தோட்டா என் காலில் பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான்... அம்மா சொன்னார் நான்... சரி, நான்... நாங்கள் இண்டியானாவிற்கு வரும்போது எனக்கு மூன்று வயது. எனவே நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அது சுமார் ஒரு வருடம் கழித்து நடந்தது, எனவே அது முதலில் நடந்தபோது எனக்கு இரண்டு வயதுக்கு மேல் இருந்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்தபோது, ​​இங்கே படத்தில் நீங்கள் பார்க்கும் இந்த ஒளி, ஏப்ரல் ஆறாம் தேதி காலை ஐந்து மணிக்கு படுக்கைக்கு மேல் நின்றது. கென்டக்கியில் ஒரு சிறிய குடிசையில் சுற்றியிருந்தவர்களின் சாட்சியும், என் தாய் மற்றும் தந்தையின் சாட்சியும் அதுவே. அதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குத் தெரிய வில்லை, எங்கள் யாருக்கும் தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாள் முழுவதும், அது தரிசனங்களாகவே இருந்தது. 9 பின்னர் அவர் என்னிடம் சொல்லி என்னை வேலைக்கு அனுப்பிய பிறகு, நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கும் என்று எனக்குத் தெரிந்தது. அவற்றில் ஒன்று பணம், மற்றொன்று புகழ் மற்றும் பெண்கள். மனிதன், குறிப்பாகப் போதகர்கள் வீழ்ச்சிய டைவது இந்த மூன்று விஷயங்களில்தான். "இப்போது, ​​வேதத்தில், தீர்க்கதரிசிகளை கவனியுங்கள். பணத்தினால் பாலாம் வீழ்ச்சிய டைந்ததை நாம் காண்கிறோம். பெண்களால் சிம்சோன் வீழ்ச்சியடைந்தான், புகழினால் சவுல் வீழ்ச்சியடைந்தான். எனவே நான் அந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. புகழ், மற்றும் பெண்களை நான் தவிர்த்தேன் என்று எனக்குத் தெரியும், ஆனால்...?... அவர்... நான்... சகோதரிகளே, நான் சகோதரத் துவத்தையோ, ஐக்கியத்தையோ சொல்ல வில்லை, ஆனால் நான் சிறுவனாக இருந்த போது... ஒரு குரல் என்னிடம் பேசியது. என் வாழ்க்கை வரலாற்றை, நீங்கள் அனைவரும் படித்திருக்கிறீர்கள், இல்லையா? அவர் என்னிடம், ""ஒருபோதும் புகைபிடிக்கவோ, குடிக்கவோ அல்லது என் சரீரத்தைக் கறைப்படுத்தவோ கூடாது"" என்று சொன்ன போது, ​​நான் பயபக்தியுடன் இருந்தேன். " "10 நான் அதைப் பற்றி அதிகம் பயப்படவில்லை, ஏனென்றால்... ஆனால் பணத்தின் சோதனை, அதுதான் என்னைத் தொந்தரவு செய்த விஷயம். நான் மிகவும் ஏழ்மையில் வளர்ந்தேன், ஐயோ, பணம் இருந்தால்... அதனால் நான் சொன்னேன், ""ஆண்டவரே, கூட்டங்களுக்குச் செல்லும்போது, ​​நான் நிச்சயமாகப் பணத்தைப் பின்னணியில் வைப்பேன். நீர் எனக்கு உதவினால், என் கூட்டத்தில் யாரையும் பணத்திற்காகக் கெஞ்ச அனுமதிக்க மாட்டேன்." "பின்னர், காணிக்கை எடுப்பதன் மூலம் நீர் என்னை என்றைக்காவது கைவிட்டால், அப்படி நீர் என்னைக் கைவிட்டால், நான் ஊழியக்களத்தை விட்டு வெளியேறிவிடுவேன்."" சரி, ஒன்பது ஆண்டுகளாக அவர் என்னை நடத்திக்கொண்டிருந்தார்." "சமீபத்தில் கலிபோர்னியாவில் ஒரு கூட்டத்தில், ஒரே கூட்டத்தில் ஐந்தாயிரம் டாலர்களை இழந்தேன். அடுத்த கூட்டத்தில் பத்தாயிரம் டாலர்களை இழந்தேன்; நான் இன்னும் அதைக் கடன்பட்டிருக்கிறேன். எனவே, அந்த... கூட்டங்கள் செலவை ஈடு கட்டவில்லை... இப்போது, ​​அது... நான் வந்தேன்... அன்று இரவு வீட்டிற்குச் சென்றேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றேன், நாங்கள் முடித்தபோது காலை இரண்டு மணி இருக்கும். நான் மனைவியிடம், ""நான் வெளியே போய் சிறிது ஜெபிக்க விரும்பு கிறேன்"" என்று சொன்னேன். நான் வெளியே போய் ஜெபித்தேன். நான் உள்ளே வந்தபோது, ​​கிட்டத்தட்ட விடியற்காலை ஆகிவிட்டது. நாங்கள் வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்தோம், முகம் சிவந்து, கண்ணீர் வழிந்தது. அவள், ""பில்லி, உனக்கு என்ன ஆச்சு?"" என்று கேட்டாள்." """ஓ,"" நான் சொன்னேன், ""நான் ஆண்டவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்."" நான் கூட்டங்களை நிறுத்திவிட்டேன் என்று அவளிடம் சொல்ல எனக்குத் தைரியம் இல்லை. நான் ஆண்டவரிடம், ""இது என் வாக்குறுதி"" என்று சொன்னேன்." "11 வீட்டிற்குச் செல்லும் வழியில் நான் சொன்னேன், ""நான் கலிபோர்னியாவை விட்டு வெளியேறியதும், அரிசோனா வந்தவுடன் அவர்களிடம் சொல்வேன்,"" பில்லி மற்றும் என் மனைவியிடம். அவன்... பின்னர் நான் சொன்னேன், ""டெக்சாஸ் வந்தவுடன் அதைச் செய்வேன்."" பின்னர் நான்... சரி, இண்டியானாவில் வீட்டிற்கு வந்தபோது அவர்களிடம் சொன்னேன். என் மனைவியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் சொன்னாள், ""பில், நீ செய்வது தவறு என்று நான் பயப்படுகிறேன்."" " "பில்லி பால் சொன்னான், ""இப்போது பாருங்கள், அப்பா, அதைத்தான் நீங்கள் தேவனுக்கு வாக்குறுதி அளித்தீர்கள். தேவன் உங்களை அப்படிச் செய்யச் சொல்லவில்லை."" " "நான் சொன்னேன், ""ஆம், ஆனால் ஒரு நேர்மையான மனிதன் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவான்."" அது ஒரு உண்மையான விஷயம். " "சொன்னான், ""சரி, நீங்கள்... நான் உங்களை நம்பவில்லை... உங்களால் அதைச் செய்ய முடியாது, அப்பா."" ""வேதம் சொல்ல வில்லையா, பவுலோ அல்லது யாரோ சொன்னார்கள், 'நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக் காவிட்டால் எனக்கு ஐயோ'?"" என்று கேட்டான்." "12 நான் சொன்னேன், ""நான் சுவிசே ஷத்தைப் பிரசங்கிப்பேன். அதனால் நான் கீழே உள்ள பழைய தியேட்டரை வாடகைக்கு எடுத்து, ஒரு வானொலி ஒலிபரப்பைச் செய்து, மக்களை இங்கே ஜெஃபர்சன்வில்லுக்கு வரவழைத்து அவர்களுக்காக ஜெபிப்பேன், எதுவானாலும்."" நான் சொன்னேன், ""ஆனால் ஊழியக்களத்தில் வேண்டாம், இந்த நேரத்தில் அங்கே அதிக பணம் தேவைப்படுகிறது."" அதனால் நான் சொன்னேன், ""நான் இதை அடைத்துவிட்டு, மீண்டும் வேலைக்குச் சென்று எனக்கு ஒரு வேலையைத் தேடிக்கொள்வேன். நான் அதைச் செய்வேன் என்று தேவனிடம் வாக்குறுதி அளித்தேன், நான் அதைச் செய்யப் போகிறேன்."" அது என் இதயத்தில் இருந்தது." "அன்று இரவு படுக்கைக்குச் சென்றேன், மறுநாள் காலையில் எழுந்தேன். நான் படுக்கையின் ஓரத்தில் இறங்கினேன், நாங்கள் வெகு நேரம் கழித்தே படுக்கைக்குச் சென்றோம். என் மனைவி, ""நாம் சிறுமியைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், பில்லி"" என்று சொன்னாள். நான் சொன்னேன்..." நான் ஒரு பக்கம் எழுந்தேன், அவள் மறுபக்கம் இறங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் எப்போதும் காலையில் எழுந்ததும் அங்கே ஒரு பழைய நாற்காலியின் அருகில் மண்டியிட்டு ஜெபிப்போம். நான் கிறிஸ்தவனானதிலிருந்து அப்படிச் செய்வது என் வாழ்நாள் முழுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது, அவளுக்கும் அப்படித்தான். அவள் படுக்கையின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தாள். நான் என் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன். "13 சுவரிலிருந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்தேன், மரச் சக்கரங்கள் கொண்ட ஒரு சிறிய வண்டியை இழுத்துக் கொண்டு, அரை நிர்வாணத்துடன் இரண்டு சிறிய கருப்பு நிறக் குழந்தைகள் வந்தார்கள். நான் சொன்னேன், ""இப்போது, ​​மீடா, அதைத்தான் நான் உன்னிடம் சொல்ல முயற்சிக்கிறேன்."" அவளால் என்னைக் கேட்க முடிந்தது, ஆனாலும் நான் தரிசனத்திற்குள் வெகுதூரம் சென்றுவிட்டேன்; அவள் ஏன் பதில் சொல்லவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை... அவள் சுற்றி வந்தாள். இப்போது, ​​அந்த தரிசனங்கள் அப்படித் தாக்கும்போது, ​​நீங்கள் ஒரு கோமா நிலையில் இருப்பதைப் போல இருப்பீர்கள். அதனால் அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்." "நான் நடக்க ஆரம்பித்தேன், நான் திரு. ஆர்கன்பிரைட்டைச் சந்தித்தேன், கூட்டம் ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். நான் உள்ளே செல்ல வேண்டும். நான் கூட்டத்திற்குச் சென்றபோது, ​​ஓ, என், இவ்வளவு அதிகமான மக்களை நான் பார்த்ததே இல்லை. [ஒலி நாடாவில் பதிவு இல்லாத இடம்]... மக்கள். அவர்கள் கருப்பு நிற மக்களாகவும் ஆனால் மென்மையான வர்களாகவும் தெரிந்தார்கள். ""அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?"" என்று நான் நினைத்தேன். தரிசனத்தில் என் இடத்தில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். நான், ""யார் பேசுவது?"" என்று கேட்டேன்." "அங்கே நின்றிருந்த ஒரு போதகர், ""ஓ, அவர்கள் அவரை நிறுத்தினார்கள்"" என்று சொன்னார். " "நான், ""யார் அவர்கள்?"" என்று கேட்டேன்." "14 சரியாக அப்போது அவர், ""நீங்கள் அனைவரும் கலைந்து செல்லலாம்"" என்று சொன்னார். ஓ, சுமார் இருபது, முப்பதாயிரம் மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். நான் சொன்னேன், ""ஏன், அவர்கள் பீட அழைப்பு ( altar call) கொடுக்கவே இல்லையே."" நான் சொன்னேன், ""அது சரியல்ல.""" "ஒரு பொன்னிறத் தலைமுடி கொண்ட மற்றொரு போதகர் தன் கையை உயர்த்தி, கையில் ஏதோ பையை வைத்துக்கொண்டு, ""ஆனால் நாங்கள் காணிக்கையை எடுத்து விட்டோம்"" என்று சொன்னார். " "நான் சொன்னேன், ""பீட அழைப்பை விடக் காணிக்கை எப்போது மிகவும் அவசியமான இடத்திற்கு வந்தது?"" அப்போது, ​​""வெளியே பன்னிரண்டு பேர் கூட இருக்க மாட்டார்கள்"" என்று நான் சொன்னேன். " "அவர்கள், ""இன்று மதியம் நீங்கள் பேச வேண்டும்"" என்றார்கள்." "நான், ""எந்த நேரத்தில்?"" என்று கேட்டேன்." """எந்த நேரத்திலும்"" என்றார்கள். " """ஏன்,"" நான் சொன்னேன், ""வெளியே பன்னிரண்டு பேர் கூட இருக்க மாட்டார்கள்."" மேலும் நான்..." "அவர் சொன்னார், ""கிறிஸ்து உண்மையைச் சொன்னபோது பன்னிரண்டு பேருடன் தானே விடப்பட்டார்?""" 15 சரியாக அப்போது நான் வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். நான் ஒரு சிறிய இடத்தின் ஓரத்தில் அமர்ந்தேன், ஒரு சிறிய குழந்தைக் காலணியை, ஒரு சிறிய தோல் காலணியைப் ( moccasin) பார்த்தேன். அந்தக் காலணியின் சிறிய துளை வழியாக அந்தத் தூணின் அளவுள்ள ஒரு பெரிய கயிற்றை நுழைத்து, ஷூவைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருந்தேன். இது யாரையும் காயப் படுத்தாது என்று நம்புகிறேன். நான் இதை ஒருபோதும் பத்திரிகையில் போடவில்லை. இங்கே எத்தனை பேர் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் கைகளை உயர்த்து வோம், உண்மையிலேயே பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள்? ஆம், சரி. அப்படி யானால் நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் அதை பத்திரிகையில் அப்படி வெளியிடவில்லை. "ஆனால் நான் இந்தச் சிறிய ஷூவை இந்தக் கயிற்றால் கோர்க்க முயற்சித்தேன், ஓ, அந்தச் சிறிய துளை சுமார் எட்டில் ஒரு அங்குலம் இருந்தது, ஆனால் நான் வைத்திருந்த கயிறு சுமார் அரை அங்குலம் இருந்தது. நான் நூல்களை உடைத்துக் கொண்டிருந்தேன், முழு மனதுடன் அதைத் தள்ள முயற்சித்தேன். எனக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் பேசியது. அது, ""நீ என்ன செய்கிறாய்?"" என்று கேட்டது." "நான், ""இந்த ஷூவைக் கட்டுகிறேன்"" என்றேன்." "16 அவர் சொன்னார், ""நீ கயிற்றின் தவறான முனையைப் பயன்படுத்துகிறாய்."" நான் கீழே தரையைப் பார்த்தேன், அங்கே உண்மையில் அந்தக் கயிறு கிடந்தது, ஓ, அது எட்டில் ஒரு அங்குல அளவிற்குச் சுருங்கி, மிக அழகாக டேப் ஒட்டப்பட்டிருந்தது. அவர் சொன்னார், ""பெந்தெகோஸ்தே குழந்தைகளுக்கு நீ அமானுஷ் யமான காரியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது."" ""நீ மாம்சரீதியான போலச் செய்தல்களை ( carnal impersonations) உண்டாக் குவாய்"" என்றார். இப்போது, ​​அது உண்மை. தரிசனம் சொன்னதை மட்டுமே என்னால் சொல்ல முடியும். பார்க்கவும்? ""பெந்தெ கோஸ்தே குழந்தைகளுக்கு அமானுஷ்யமான காரியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது. நீ மாம்சரீதியான போலச்செய்தல்களை உண்டாக் குவாய்."" அதனால், நான் அங்கே நின்றேன்." "சரியாக அப்போது, ​​நான் வேறொரு பரிமாணத்திற்குச் சென்றது போல் இருந்தது. அது இருந்தபோது... இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், இந்தக் காரியங்களைக் கவனியுங்கள். அவை வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறும். அது சரியானது. பார்ப்பதற்கு ஒரு ஏரி போலிருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னை அழைத்துச் சென்று அந்த ஏரியின் கரையில் அமர வைத்தார். அங்கே நிறையப் போதகர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்தேன், அங்கே பெரிய மீன்கள் இருந்தன. அவர்களில் சிலர் மிகச்சிறிய மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக அப்போது நான், ""ஓ, என்"" என்றேன். நான் சொன்னேன், ""நான் ஒரு மீனவன். நான் அந்த மீனைப் பிடிப்பேன்.""" "17 எனவே தரையில் கிடந்த தூண்டிலைக் கையில் எடுத்தேன். அப்போது, ​​என்னிடம் சொன்ன அந்த நபர், எனக்குப் பின்னால் என் வலது பக்கம் பேசிக் கொண்டிருந்தவர், ""நான் உனக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுக்கிறேன்"" என்றார். " "நான், ""சரி"" என்றேன்." "அவர், ""தூண்டில் முள்ளைக் ( lure) கட்டு, ஆனால் ஆழத்தில் வெகுதூரம் வீசு"" என்றார். நான் ஆழத்தில் வெகுதூரம் வீசினேன். அவர் சொன்னார், ""இப்போது, ​​நீ வீசியதும், உன் இரை கீழே தங்கட்டும். முதலில் மெதுவாக இழு."" அவர் சொன்னார், ""சிறிய மீன்கள் இரையைப் பின்தொடரும்."" இப்போது, ​​அது உண்மையில் மீன்பிடிக்கும் உத்திதான். அவர் சொன்னார், ""மெதுவாக இழு."" ""சிறிய மீன்கள் பின்தொடரும். உனக்கு ஒரு பிடி (" "strike) கிடைக்கும்போது,"" ""சற்று இழுத்துவிடு, கடினமாக அல்ல"" என்றார். ஆனால் சொன்னார், ""நீ எப்படிச் செய்கிறாய் என்று யாருக்கும் சொல்லாதே."" ""அமைதியாக இரு. நீ என்ன செய்கிறாய் என்று யாருக்கும் சொல்லாதே"" என்றார். ""மெதுவாக இழு. பின்னர்,"" சொன்னார், ""உனக்கு பிடி கிடைத்தது போல் உணரும்போது, ​​சிறிய மீன்களைச் சிதறடிக்கும் அளவிற்கு உன் இரையை இழு. அது பெரிய மீனை அதை நோக்கி ஓடிவரச் செய்யும், பின்னர் உனக்கு ஒரு பிடி கிடைக்கும்போது, ​​பிடிப்பதற்காக உன் தூண்டிலை இழு.""" "18 நான் சொன்னேன், ""எனக்குப் புரிகிறது."" நான் அதை வெகுதூரம் வீசினேன். நான் செய்த உடனேயே, இந்தப் போதகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஓடி வந்து, ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோதரர் பிரான்ஹாம் உண்மை யில் மீன் பிடிப்பார்"" என்றார்கள். அவர்கள் அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்." அவர்கள் என்னை ஒரு மீனவன் என்று சொல்வதால், அதைக் குறித்து நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன். அதனால் எப்போது... "நான் சொன்னேன், ""இப்போது, ​​அது எப்படிச் செய்யப்படுகிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதோ இப்படித்தான் செய்ய வேண்டும்."" நான் சொன்னேன், ""முதலில், நீங்கள் மெதுவாக இழுக்க வேண்டும். பின்னர் சிறிய மீன்கள் பின்தொடரும் போது,"" நான் சொன்னேன், ""நீங்கள் இப்படி இழுக்க வேண்டும்."" நான் அப்படிச் செய்தபோது, ​​இரை, தூண்டில் மற்றும் எல்லாவற்றையும் தண்ணீரிலிருந்து வெளியே இழுத்தேன். நான் பார்த்தேன். நான் ஒரு மீனைப் பிடித்தேன், ஆனால் அது எப்படி அந்த இரையைத் தன் வாயில் வாங்கியது என்று நான் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் மீனின் தோல் இரையைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அது அவ்வளவு சிறிய மீன். சரியாக அப்போது நான், ""ஓ, என், பார்"" என்றேன்." "19 சரியாக அப்போது எனக்குப் பின்னால் பேசிக்கொண்டிருந்த அந்த நபர் எனக்கு முன்னால் வந்து நின்றார். அது எப்போதும் என்னிடம் பேசும் அதே தேவதூதர்தான். அவர் சொன்னார், ""மேடையில் நின்று, அதை விளக்க முயற்சிப்பதும், மக்களுக்குச் சொல்வதும் கூடாது, அதை உனக்குள்ளேயே வைத்துக்கொள் என்று நான் சொன்னதையே நீ மீறிச் செய்தாய்."" ""நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார். எழும்பியிருக்கிற மாம்சரீதியான போலச் செய்தல்களைப் பார்"" என்றார். பார்க்கவும்? நான் மக்கள் அப்படிச் சொல்வதைக் கேட்கிறேன்." """சகோதரர் பிரான்ஹாம், ஓ, ஆண்டவர் எனக்கு ஒரு ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார்"" என்று மக்கள் சொல்வதை நான் கேட்கிறேன். உங்களுக்கு ஒருவேளை பெரிய...?... ஆம். ஆனால் அதே போன்றதா? இல்லை. நான் பூமியில் இருக்கும் வரை ஒருபோதும் அப்படி இருக்காது. அவர் ஆரம்பத்திலேயே என்னிடம் அதைச் சொன்னார், நான் வாழும் வரை (பார்க்கவும்) ஒருபோதும் இருக்காது. இப்போது, ​​அவர் என்னிடம் அதைச் சொன்னார். மக்கள் அப்படிச் சொல்வதை நான் கேட்கிறேன், அது தவறு என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் விரும்பவில்லை...?... அவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று. ஆனால் அவர்கள்..." "20 ""நீ போலச்செய்தல்களை உண்டாக் குகிறாய்"" என்று அவர் சொன்னார். அப்போது நான் அழத் தொடங்கினேன். நான் அந்தக் கயிற்றை எடுத்து அதை நேராக்க முயற்சித்தேன். சரியாக அப்போது அவர் என்னைப் பார்த்தார். அவர் என்ன செய்யப் போகிறார் என்று நான் யோசித்தேன். அவர், ""இப்படிப்பட்ட நேரங்களில் உன் கயிற்றை ( line) நேராக வைத்துக்கொள்"" என்றார். " "நான் ""சரி"" என்றேன். எனவே நான் மீண்டும் வீசுவதற்கு கயிற்றைத் தயார் செய்தேன், அந்த நேரத்தில் நான் செய்தபோது, ​​அவர் என்னை மீண்டும் அழைத்துச் சென்றார், ஒரு பெரிய கலையரங்கம் அல்லது பெரிய கூடாரத்தின் மேல் காற்றில் என்னை நிறுத்தினார். ஓ, அப்படிப்பட்ட ஒரு கூடாரத்தை நான் பார்த்ததே இல்லை, அது வெகுதூரம் பரவியிருந்தது. அதில் நான் பலிபீட அழைப்பு கொடுத்தது போலத் தெரிந்தது, நூற்றுக் கணக்கான மக்கள், மிக மென்மையாகவும் இனிமையாகவும் அழுதுகொண்டு, பலிபீடத்தின் அருகே அமர்ந்து, கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். நான் சொன்னேன், ""அது நன்றாக இருக்கிறது.""" "21 பின்னர் அவர் சொன்னார்... அங்கே ஒரு நல்ல, மென்மையாகப் பேசும் கனவான் வெளியே வந்து, ""இப்போது, ​​சகோதரர் பிரான்ஹாம் சிறிது ஓய்வெடுக்கும்போது, ​​நாம் ஜெப வரிசையை அமைப்போம்"" என்றார். ""ஜெப அட்டைகள் உள்ளவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தொடங்கி என் வலதுபுறம் வரிசையில் நில்லுங்கள்"" என்றார். நான் பார்த்தேன், அது நான் நின்றிருந்த இடத்திலிருந்து என் இடதுபுறமாக இருந்தது. அங்கே ஒரு சிறிய கட்டிடம் அமைக்கப் பட்டிருந்தது, அது இப்படி கட்டப்பட்ட சிறிய சிறிய கட்டிடம். " மக்கள் அனைவரும், ஓ, அந்தக் கூடாரத்தைச் சுற்றியும், ஒரு நகரத் தெரு ( block) அல்லது அதற்கும் மேலாக, ஒரு பெரிய வரிசையில் மக்கள் சென்றார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் ஜெப அட்டையுடன் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். சரியாக அப்போது நான் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளுக்குப் பின்னால் ஒரு மனிதன் ஊன்று கோலில் ( crutches) நின்று கொண்டிருப்பதையும் பார்த்தேன். எனவே அவர்கள் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். தங்கள் முறைக்காக. அங்கே ஒரு பெண்மணி அவர்களின் பெயர்களையும் மற்ற விவரங்களையும் குறித்துக் கொண்டிருந்தார். பின்னர் இங்கே ஒரு படுதா ( canvas) கட்டப்பட்டிருந்தது, அதனால் யாரும் அந்தக் கூடாரத்தைச் சுற்றி வர முடியாது. 22 சரியாக அப்போது... இப்போது, ​​இதை நீங்கள் கவனிக்க வேண்டும், அது எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். வித்தியாசத்தைக் கவனியுங்கள். அப்போது ஏதோ ஒன்று சுற்றி வரும் சத்தத்தைக் கேட்டேன். உர்ர், உர்ர், உர்ர், என்று ஒவ்வொரு முறையும் சுகமளிக்கும் கூட்டம் நடக்கும்போது வரும் சத்தம். அது அப்படித்தான் நடக்கும். அது எப்போதும் அப்படித்தான் ஒலிக்கும். அந்த முறை முட்செடியில் நான் கேட்டபோதும் அப்படித் தான் ஒலித்தது. அது எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. நான் அதை உணர்ந்தேன். அது நகர்ந்து செல்வதை நான் கேட்டேன். நான் பார்த்தேன், அந்த உண்மையான மெல்லிய ஒளி என்னை விட்டு விலகிச் சென்று, கீழே இறங்கி அந்தச் சிறிய கட்டிடத்திற்குள் சென்றது. "பின்னர் ஒளிக்கும் அந்தத் தேவதூதருக்கும் இடையே ஏதோ வித்தியாசம் இருந்தது, ஏனென்றால் அவர் இன்னும் என்னுடனே இருந்தார், ஒளி அந்தக் கட்டிடத்திற்குள் சென்றிருந்தது. எனக்குப் பின்னால் இன்னும் பேசிக்கொண்டிருந்த இந்தத் தேவதூதர், ஒரு பெரிய மனிதர், அவர் சொன்னார், ""நான் உன்னை அங்கே சந்திப்பேன்."".." "அப்போது நான், ""ஏன் உள்ளே என்று எனக்குப் புரியவில்லை"" என்றேன்." "23 அவர் சொன்னார், ""கவனி."" அந்தப் பெண் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் அங்கிருந்து வெளியே வந்தபோது, ​​அவள் அந்த ஸ்ட்ரெச்சரை மறுபுறம் தள்ளிக்கொண்டு வந்தாள். " "அந்தப் பெண் அவளிடம் கேட்டார்... ""என்ன-என்ன நடந்தது?"" என்று கேட்டார்." "அவள் சொன்னாள், ""எனக்குத் தெரியாது. அது நடந்துவிட்டது."" ""நான் இந்த ஸ்ட்ரெச்சரில் இருந்தேன். நான் பல வருடங்களாகப் படுக்கையில் இருந்தேன்"" என்றாள். இங்கே அந்த மனிதர் தன் ஊன்று கோலைச் சுமந்துகொண்டு வெளியே வந்தார். என்ன என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள், அவருக்குத் தெரியவில்லை என்று சொன்னார். அவர் சாட்சி சொல்ல மேடைக்கு வந்து கொண்டிருந்தார்." "நான் சொன்னேன், ""எனக்கு உள்ளே இருப்பது புரியவில்லை.""" "24 கவனியுங்கள், அவர் எப்போதும் வேத வசனத்தின்படியே இருக்கிறார். அவர் சொன்னார், ""'நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அந்தரங்கத்தில் பார்க்கிற உங்கள் பிதாவுக்கு நீங்கள் ஜெபம் பண்ணுங்கள்; அந்தரங்கத்தில் பார்க்கிற அவர் உங்களுக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்' என்று நம் ஆண்டவர் சொல்லவில்லையா?""" "அவர் சொன்னார், ""அந்த முறை நீ கனவு கண்டு தேடிக்கொண்டிருந்த அந்தப் பெயர் உனக்கு நினைவிருக்கிறதா?""" "நான், ""ஆம்"" என்றேன்." "அவர் சொன்னார், ""நான் உன்னை அங்கே சந்திப்பேன், இம்முறை அது ஒரு பொதுக் காட்சியாக இருக்காது."" தரிசனம் என்னை விட்டு நீங்கியது." 25 இப்போது, ​​எங்களுக்குக் கூடாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதற்குள்ளே நான் ஜெப வரிசையை நடத்த முடியும். இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், அது நடப்பதற்கு முன்பே நான் இதைப் பேசுகிறேன். மிகவும் அதிகமாய் காரியங்கள் நடக்கப்போகிறது. நான் அந்த இடத்திற்குச் செல்லும் வரை என்னால் காத்திருக்க முடியாது. நான்... என் இதயம் ஏங்குகிறது மற்றும் பற்றி எரிகிறது. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தக் காரியங்கள், நம் ஆண்டவர் செய்யப்போகும் காரியங்களுக்கு முன்னால் ஆரம்ப நிலையாக ( amateur) இருக்கும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது அவருக்காக வாழுங்கள், பயபக்தியுடன் இருங்கள். நீங்களாகவே இருங்கள். திருமதி டோ அல்லது திரு. டோ (சாதாரண நபர்) ஆக இருந்து ஆண்டவரை நேசியுங்கள், அவருக்கு முன்பாக உண்மையான இதயத்துடன் பயணியுங்கள், அவரை நேசியுங்கள். மீதமுள்ளவற்றை அவர் பார்த்துக்கொள்வார். பார்க்கவும்? 26 ஆனால் அப்போது ஜெப வரிசைக்கு முடிவே இருக்காது, ஏனென்றால் அது மணிக்கணக்கில் செல்லும். நம் ஆண்டவர் என்ன செய்யப் போகிறார் என்று பாருங்கள். இப்போது, ​​அவர் அதைச் சொன்னபோது உள்ளே என்ன நடக்கிறது... இப்போது, ​​நினைவில் கொள்ளுங்கள், வேதம் திறந்திருக்கிறது. நான் முதலில் செய்தேன், என் கை என் இதயத்தின் மேல் இருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள ஒரு மனிதனும் அதை ஒருபோதும் அறிய மாட்டான். நான் மற்றதை ஒரு காட்சியாக மாற்றினேன், ஆனால் தேவன் என் உதவியாளராக இருக்கிறார்... இன்று இரவு வரை நான் காத்திருந்ததற்குக் காரணம்... நான் இதை முதல்முறையாகப் பொதுவில் சொல்கிறேன். இதைச் சொல்ல இன்று இரவு வரை காத்திருந்தேன். தேவன் என் உதவியாளராக இருப்பதால், மரணம் என்னை விடுவித்து நான் தேவனுடன் இருக்க வீட்டுக்குச் செல்லும் வரை, ஒரு மனிதனும் இதை அறிய மாட்டான். நான் இதை ஒருபோதும் ஒரு காட்சியாகவோ அல்லது பொதுவான விஷயமாகவோ மாற்ற மாட்டேன். மற்ற முறை நான் செய்தது போல இதை வெளியிடுவது மிகவும் புனிதமானது. 27 மக்களிடம் நான் கேட்கிறேன், எனக்கே ஒன்றும் தெரியாத ஒன்றை விளக்க முயற்சித் ததற்காக, நீங்கள் என்னை மன்னிக்கவும். நீங்கள் தேவனை விளக்கக்கூடாது. நீங்கள் தேவனை நம்ப வேண்டும். அவரை விளக்க எந்த வழியும் இல்லை. எனவே, அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஜெப வரிசையைத் தொடங்க நான் முயற்சிப்பதால், நாங்கள் நேராகக் கூட்டத்திற்குச் செல்லும்போது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவ சித்தமானால். ஆனால் என் வார்த்தைகள் ஒரு மனிதனின் வார்த்தைகள். என் இதயத்தில் ஏதோ ஒன்று பற்றி எரிந்துகொண்டும் ஏங்கிக்கொண்டும் இருப்பதை நீங்கள் கற்பனை செய்யலாம், நான் ஏன் ஜெப வரிசைகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம். மினியாபோலிஸில் ஒரு ஜெப வரிசை கூட நடத்த நான் நினைக்கவில்லை, எங்குமே இல்லை. அங்கே நான் எந்த ஜெப வரிசையையும் நடத்தவில்லை. பார்க்கவும்? ஏனென்றால் இதுதான் காரணம். நான் சந்திக்க வந்தேன். நான் உங்களுடன் ஐக்கியம் கொள்ள வந்தேன். நான் வெளியே சென்று உங்களைப் பார்க்க விரும்புகிறேன், நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். 28 ஆனால் நான் ஆவியானவரின் இந்த அபிஷேகத்தின் கீழ் வரும்போது, ​​நான் மேடைக்கு வரும் வரை அங்கேயே இருந்து ஜெபிக்கிறேன். கூட்டத்தில், நாங்கள் புறப்படும்போது... மேலாளர் மற்றும் பில்லி பால் மற்றும் அவர்கள் செய்வது போல நீங்கள் என்னைச் சமாளிக்க வேண்டியிருந்தால், சில நேரங்களில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கூட உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். உங்களுக்குத் தெரியாது நீங்கள்... ஏன்? இது தரிசனங்கள், நீங்கள் பேசத் தொடங்கும் ஒவ்வொருவரும், மீண்டும் ஒரு தரிசனம். நீங்கள் அதிலிருந்து வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும். இப்போது, ​​பெரும்பாலும் எல்லாத் தீர்க்கதரிசிகளும் கவிஞர்களும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களாகக் ( neurotics) கருதப்படுகிறார்கள். அது உண்மை என்று எத்தனை பேருக்குத் தெரியும்? எலியா வானத்திலிருந்து அக்கினியை வர வழைத்து, அவருடைய தரிசனம் நிறைவேறிய பிறகு அவரைப் பாருங்கள். நாற்பது பகலும் இரவும் அவர் வனாந்தரத்தில் அலைந்தார். எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக, அவர் செய்ததாக வேதம் சொல்கிறது. தேவன் அவர் ஒரு குகையில் படுத்திருப்பதைக் கண்டார். அது சரியா? தீர்க்கதரிசியாகிய யோனாவைப் பாருங்கள், அவர் தீர்க்கதரிசனம் உரைத்து, தன் தரிசனத்தை நிறைவேற்றிய பிறகு. அவர் மலையின் மேல் சென்று தன் உயிரை எடுக்கும்படி தேவனி டம் ஜெபித்தார். "29 வில்லியம் கூப்பர் ( William Cowper) ஐப் பாருங்கள், ""இம்மானுவேலின் நரம்புகளிலிருந்து பெறப்பட்ட இரத்தத்தால் நிரப்பப்பட்ட நீரூற்று ஒன்று உள்ளது"" (" There is a Fountain Filled with Blood Drawn from Emmanuel's Veins) என்று எழுதிய சிறந்த பாடலாசிரியர். ஏன், அந்தப் பாடலின் உத்வேகத்தை எழுதி முடித்தபோது, ​​தற்கொலை செய்து கொள்ள அவர் நதியைத் தேடினார். "உலகிற்குச் சிறந்த நாட்டுப்புறப் பாடல்களைக் கொடுத்த ஸ்டீபன் ஃபாஸ்டரைப் ( Stephen Foster) பாருங்கள், ""ஓல்ட் ஃபோக்ஸ் அட் ஹோம்"" (" "Old Folks At Home) , ""ஸ்வானி ரிவர்"" ( Swanee River) , ""ஓல்ட் பிளாக் ஜோ"" ( Old Black Joe) , மற்றும் பல. சரி, அவர் ""மை ஓல்ட் கென்டக்கி ஹோம்"" (" My Old Kentucky Home) மற்றும் பல பாடல்களை எழுதியபோது, ​​அந்த உத்வேகத்தின் ஆதிக்கத்திலிருந்து அவர் வெளியே வந்தபோது, ​​அவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். பின்னர் அவர்... ஒரு முறை அவர் வெளியே வந்து, ஒரு வேலைக்காரனை அழைத்து, ஒரு சவரக் கத்தியை எடுத்துத் தற்கொலை செய்து கொண்டார். பார்க்கவும்? 30 உங்களுக்குப் புரியாது. அதை விளக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் அதை நம்புங்கள். நான் இனி அதை விளக்க முயற்சிக்கவில்லை. நீங்கள்... மக்கள் நம்பப் போகிறார்கள் அல்லது... சரி, நான் அவ்வளவு தான் செய்யப் போகிறேன். மீதமுள்ளவற்றைச் செய்வது தேவனின் கையில் உள்ளது. என்னால் அவருடைய வேலையைச் செய்ய முடியாது. "எனவே விசுவாசம் வைத்து நம்புங்கள். நீங்கள் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப் பட்டிருந்தால், ""என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் எவனும் என்னிடத்தில் வரமாட்டான்"" என்று இயேசு சொன்னார். அது சரி. நீங்கள் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப் பட்டிருந்தால், பார்ப்பதற்கும் நம்புவதற்கும், நீங்கள் செய்வீர்கள். நீங்கள் இல்லையென்றால், அது ஒரு வாத்தின் முதுகில் தண்ணீர் ஊற்றுவது போன்றது. அது எந்தப் பலனும் அளிக்காது. நீங்கள் அதை விளக்க எவ்வளவு முயன்றாலும் பரவாயில்லை, உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன்" தேர்ந்தெடுத்தவர்கள்... நீங்கள் தேவனில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் இங்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை, உலகம் தோன்று வதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். உங்களுக்கு அது தெரியுமா? 31 உலகத் தோற்றம் முதல் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்படாத அனைவரையும் மிருகம் ஏமாற்றியது. அது எப்போது இருந்து? உலகத் தோற்றம் முதல். அது சரியா? அனைத்து வழிகளிலும் பின்னோக்கி... நித்திய ஜீவனுக்கு நியமித்தவர்களுக்காக மரிக்க இயேசு வந்தார். யார் அறிகிறார்களோ, தேவன் யாரை நியமித்தி ருக்கிறாரோ அவர்கள் அவரிடம் வருவார்கள், மற்றவர்கள் வரமாட்டார்கள். எனவே குளத்திலிருந்து கடைசி மீன் பிடிக்கப் பட்டவுடன், வலை வீசுவது முடிந்துவிடும். எனவே நாங்கள் இப்போது வலை வீச முயற்சிக்கிறோம். நாம் ஒரு கணம் ஜெபிப்போம். பரலோகப் பிதாவே, இன்றிரவு நான் அதைச் சொல்லி, தரிசனத்தைச் சொல்ல வேண்டிய நேரம் என்று உணர்ந்து, விளக்க முயற்சி செய்த எனது மீறுதல்களுக்காக முழு மனதுடன் மன்னிப்புக் கேட்கிறேன். நான் நடந்துகொண்ட விதத்திற்காகவும், இந்த விஷயங்கள் எழும்புவதற்குக் காரணமாக இருந்ததற்கும் நான் வருந்துகிறேன், இது பெரிய தடையை ஏற்படுத்தியது மற்றும் மாம்சரீதியான ஒப்பீடுகள் சபைக்கு நிந்தையைக் கொண்டு வந்தது. எனவே நான்... பிதாவே, நான் இதை முதல்முறையாகப் பகிரங்கமாகத் தெரியப் படுத்தியிருப்பதால், என் மீறுதல்கள் அனைத் தையும் நீர் மன்னிக்கும்படி ஜெபிக்கிறேன். 32 அன்பான இயேசுவே, நீர் இன்றிரவு எங்களுக்கு உதவி செய்து, இன்றிரவு எங்களை மிகவும் பரிபூரணமாக ஆசீர்வதித்து, உமது ஆசீர்வாதங்களை ஊற்றும்படி இப்போது நான் உம்மிடம் கேட்கிறேன். மேலும் தேவனே, நாங்கள் கூடாரத்தை அமைத்து, மீண்டும் கர்த்தருடைய உண்மையான ஆராதனைகளில் இறங்கி, ஜனங்கள் மத்தியில் உமது மகத்தான வல்லமையுள்ள கரம் செயல்படுவதைக் காணக்கூடிய அந்த நாளைத் துரிதப்படுத்துவீராக. பரம பிதாவே, இதைத் தந்தருளும். நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் தேவனே, தேசம் முழுவதிலும், உலகம் முழுவதிலும், எங்கும் இருக்கிற என் சகோதரர்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, ஊழியர் களைப் புதிதாக அபிஷேகம் செய்யும்; நாங்கள் கிரியை செய்வதற்கு இன்னும் கொஞ்சக்காலமே இருக்கிறது என்பதையும், அதன் பின்பு இயேசு வருவார் என்பதையும் காண்கிறபடியால், இந்தக் கடைசி நாளில் அவர்கள் சரியாகப் போர்க் களத்தின் முன்னணியில் இருக்கச் செய்யும். ஓ தேவனே, தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் செய்வார்கள் என்று வேதாகமம் சொல்லியிருக்கிறபடியே, இந்தக் கடைசி நாளில் நாங்களும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் எழும்பி, முன்னேறிச் சென்று, பராக்கிரமங்கள் செய்வோமாக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 33 லூக்கா 2 -ம் அதிகாரம் 25 -வது வசனம்... அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப் பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; ...உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். வார்த்தையை வாசித்தலுடன் கர்த்தர் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. "34  ""பரிசுத்த ஆவியானவரால் நடத்தப் படுதல்"" ( Being Led of the Holy Spirit) என்ற தலைப்பில் நான் சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். நீங்கள் அதை நம்புகிறீர்களா? [சபையினர் ""ஆமென்"" என்கிறார்கள்]" நின்று கொண்டிருக்கும் மக்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்றாவது ஒரு நாள் (இதை என் இதயத்திலிருந்து சொல்கிறேன்), போதுமான விசுவாசம் உள்ள நீங்கள், என்னைப் போதுமான அளவு நேசித்து, கர்த்தராகிய இயேசுவை முதலாவதாக நேசித்து, பின்னர் சபையில் வந்து நிற்கும்படி நான் பிரசங்கிக்கும் வார்த்தையை மதித்து, ஒருவேளை வெளியூரிலிருந்து வந்து, கூட்டத்திற்குப் பிறகு நீண்ட தூரம் பயணித்து, இடைகழியில் ( aisle) நின்று கொண்டிருக்கும் உங்களை, தேவன் ஆசீர்வதிப்பார் என்றும், நீங்கள் பரலோகத்தைச் சேருவீர்கள் என்றும் - பரலோகம் உங்கள் வீடாக இருக்கும் என்றும் நான் தேவனை நம்புகிறேன். எல்லா யுகங்களிலும் நாம் ஒன்றாகச் சேர்ந்து களிகூருவோம். நீங்கள் பூமியில் இருக்கும்போதே தேவன் உங்களில் ஒவ்வொருவரையும், போதகர்கள், இல்லத்தரசிகள் மற்றும் நீங்கள் யாராக இருந்தாலும், உங்களை அபிஷேகம் செய்து, இயேசு சீக்கிரம் வருகிறார் என்ற செய்தியை, சாகும் தருவாயில் உள்ள இந்த உலகத்திற்குக் கொடுப்பாராக என்று நான் ஜெபிக்கிறேன். அவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் என் ஜெபத்தைக் கேட்டால், இதற்காகவும் கேட்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்து வரும் வரை இந்தச் சபை நிலைத்து நின்று, மகத்தானதாகவும், ஆத்துமாக் களை ஆதாயம் செய்யும் நிலையமாகவும், ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது ஜெபம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வார்த்தையைப் பிரசங்கிக்க உங்கள் தாழ்மையான நண்பனாகிய என்னை இந்தப் பிரசங்க பீடத்திற்கு அழைத்ததற்கும், நான் பேசுவதைக் கேட்க நீங்கள் வந்ததற்கும் நன்றி. "35   இப்போது ""ஆவியானவரால் நடத்தப் படுதல்""... அந்தக் காலத்தில் எருசலேமில் நியாயப் பிரமாணத்தின் வழக்கமான முறை மைகள் இருந்தன, அவர்கள் உள்ளே வந்து ஆராதனை செய்ய வேண்டியிருந்தது, அவர்களுக்கு தேவாலயம் இருந்தது. மக்கள் அனைவரும் எப்போதும் எருசலேமில் கூடுவார்கள். அது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பலி செலுத்தப்படும் இடமாக எருசலேம் இருந்தது, பலியின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் இருப்பதைத் தவிர வேறு எங்கும் மக்களுக்கு ஐக்கியம் ( fellowship) இருக்கவில்லை." பலியின் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் நாம் தங்கியிருக்கும்போது மட்டுமே, இன்று நாம் இந்த அற்புதமான ஐக்கியத்தைப் பெற முடியும். அது சரியா? 36  எருசலேமில் ஆராதனை செய்பவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது போல... ஆட்டுக் குட்டியின் இரத்தம் பூசப்பட்ட இடம் அதுதான். ஐக்கியம் கொள்வதற்காக அவர்கள் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் வரவேண்டியிருந்தது. நாம் ஐக்கியம் கொள்ளக்கூடிய ஒரே வழி அதுதான். நாம் இரத்தத்தின் கீழ் வரும் வரை நாம் வேறுபடுவோம், பிளவுபடுவோம், வாதிடுவோம், சண்டையிடுவோம், மற்றும் நம்மைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம். நாம் இரத்தத்தின் கீழ் வரும்போது, ​​மெதடிஸ்ட் சபையார் பாப்டிஸ்ட் சபையாருடன் கை குலுக்குவார்கள், அவர்கள் பெந்தெகோஸ்தே சபையாரைக் கழுத்தோடு அணைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சகோதரன் என்று அழைப்பார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் இரத்தத்தின் கீழ் வரும்போது, ​​அது ஒரு ஐக்கியம். ஓ, எப்பேர்ப் பட்ட ஒரு அற்புதமான நேரம். மக்கள் எருசலேமுக்கு வர விரும்பியதில் ஆச்சரியமில்லை, ஏனென்றால் அவர்களுக்கு எல்லாம் பொதுவாக இருந்தது. ஆட்டுக் குட்டியின் சிந்தப்பட்ட இரத்தம் மற்றும் தகன பலி என்ற ஒரே உன்னத பலியின் கீழ் அவர்கள் ஆராதனை செய்தார்கள், எல்லோரும் ஐக்கியம் கொண்டிருந்தார்கள். 37   இப்போது, ​​அது ஒரு அற்புதமான விஷயம், ஆனால் அதைக் கொண்டிருக்கும் அதே வேளையில், பல நேரங்களில் மக்கள் வழிவிலகிச் சென்று, தேவன் நியமித்த அதே விஷயத்தையே ஒரு விக்கிரகமாக மாற்றுகிறார்கள். அதை நீங்கள் நம்புகிறீர்களா? வனாந்தரத்தில் இருந்த வெண்கல சர்ப்பத்தைப் பாருங்கள். அந்தச் சர்ப்பத்தைத் தீர்க்கதரிசி துண்டு துண்டாக உடைக்க வேண்டியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன்? ஏனென்றால் மக்கள் அந்தச் சர்ப்பத்தை வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதை ஒரு விக்கிரகமாக மாற்றினார்கள். இன்றைக்கு நீங்கள் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா? உங்கள் சபையை நீங்கள் ஒரு விக்கிரகமாக மாற்ற முடியும். உங்கள் போதகரை நீங்கள் ஒரு விக்கிரகமாக மாற்ற முடியும். ஒரு சுவிசே ஷகரை நீங்கள் ஒரு விக்கிரகமாக மாற்ற முடியும். அதில் பெரும்பகுதி அப்படிச் செய்யப் படுவதைக் குறித்து நான் பயப்படுகிறேன். அவர்கள் மனிதனை விக்கிரகமாக்குகிறார்கள். நான் கலிபோர்னியாவில் கிறிஸ்தவ வர்த்தகர்களிடம் ( Christian Business Men) பேசிக்கொண்டிருந்தேன். பவுல் தான் பயந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறிய தலைப்பில் நான் பேசிக்கொண்டிருந்தேன், அதாவது, மக்கள் தன்னைக் குறித்து அதிகமாக நினைப்பார்களோ என்றும் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நினைக்க மாட்டார்களோ என்றும் அவர் பயந்தார். எனவே அவர் வார்த்தைகளின் மேன்மையுடன் அவர்களிடம் வரவில்லை, ஆனால் அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையில் அவர்களிடம் வந்தார். அவர்கள் அவரை வணங்காமலும் அல்லது அவருக்கு மேலாக அதிகம் விசுவாசிக்காமலும் இருக்கும்படி, ஆனால் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கும் படியும், அவர்களுடைய விசுவாசம் பவுலின் மேல் இராமல், இயேசுவின் மேல் இருக்கும்படியும்... 38  இன்றும், அதுதான் இன்றைய நிலை, நாம் மக்களைப் பார்க்கும்போது, ​​இந்த நாட்களில் மக்கள் சிறிய கவர்ச்சியான விஷயங்களில் குதிப்பதற்கு மிகவும் உட்பட்டிருக்கிறார்கள், அது சில சமயங்களில் உங்களை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு மேலாக ஒருபோதும் நினைக்காதீர்கள். இல்லை ஐயா, அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் இங்கே தெருவில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் ஒரு சாதாரண சிறிய மனிதராக இருந்தாலும் சரி, அல்லது அவர் ஒரு பில்லி கிரகமாக இருந்தாலும் சரி. அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் தேவனுடைய ஊழியராக இருந்தால், அவர்கள் அனைவரையும் சமமாக மதியுங்கள். ஒருவரை மற்றவருக்கு மேலாகவும் பிடித்தமான வர்களாகவும் வைத்திருக்க வேண்டாம். நம்மிடம் அது இல்லை. அதைச் செய்யாதீர்கள். ஒரு நபரை விட இன்னொரு நபரை அதிகமாக மதிக்க வேண்டாம். எல்லோரும் சமமான நிலையில் இருக்கட்டும். சகோதரனே, சகோதரியே, விலையேறப் பெற்ற இயேசுவின் நாமத்தில், தயவுசெய்து உங்கள் தாழ்மையான சகோதரனை அந்தச் சகோதரர்களிலேயே மிகவும் தாழ்ந்தவராக நினையுங்கள். பார்க்கிறீர்களா? நான் தாழ்மையாகக் காட்டிக்கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை. நான் அதை என் இதயத்திலிருந்து சொல்கிறேன், ஏனென்றால் நான் அதை உண்மையாகவே சொல்கிறேன். நான் உங்களுக்குப் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிப்பது இயேசு கிறிஸ்துவைத்தான் (பார்க்கவும்), தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. 39  இப்போது, ​​அந்த நாட்களில் வாழ்ந்த மக்களில் உண்மையாகவே நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட, விசுவாசித்து காத்துக் கொண்டிருந்த ஒரு சிறிய மீதமான கூட்டம் இருந்தது. அந்தப் பெரிய சகாப்தத்திற்கு ( epoch) சற்று முன்பாக (அல்லது சந்திப்பு என்று நீங்கள் அழைக்க விரும்பினால், நாம் மறுநாள் இரவு பேசியது போல), அமானுஷ்யமான காரியங்கள் நடக்கத் தொடங்குவதை நாம் அறிவோம். நாம் ஒரு மனிதனைப் பார்க்கிறோம், ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் ஒரு ஆசாரியன். அவர் தேவனுடைய ஆலயத்தில் தூப வர்க்கத்தைக் காட்டும்போது அதை அசைத்துக் கொண்டு நின்றார். அவர் ஒரு நல்ல மனிதர், அவரும் அவர் மனைவியும். சகரியா, அவர் ஒரு அற்புதமான மனிதர். அவர் இஸ்ரவேலின் ஆறுதலுக்காகக் காத்திருந்தார், விசுவாசித்தார். அவருடைய மனைவி வயதானவர் மற்றும் பிள்ளை பெறும் வயதைக் கடந்தவர். "40   ஆனால் அவர் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ​​அவருடைய வலது பக்கத்தில் ஒரு தேவதூதர் தோன்றி சகரியாவிடம், ""நீ தூபம் காட்டுவதும் உனது கடமையைச் செய்வதுமான இந்த நாட்களுக்குப் பிறகு, நீ வீட்டிற்குச் சென்று உன் மனைவியுடன் இருப்பாய், அவள் கர்ப்பம் தரித்து ஒரு மகனைப் பெறுவாள்"" என்று சொன்னார். தேவதூதர் தன்னிடம் சொன்னதை அவர் சந்தேகித்தார். ஆனால் குழந்தை பிறக்கும் நாள் வரை தேவன் அவரை ஊமையாக்கினார், அல்லது தேவதூதர் அப்படிச் செய்தார். தேவதூதர் அவனுக்கு யோவான் என்று பெயரிடச் சொன்னதால், அவர் அவனுக்கு யோவான் என்று பெயரிட்டார்." நாசரேத் என்னும் ஒரு சிறிய மோசமான நகரத்தில், கன்னிப்பெண்களின் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கச் செல்லும் வழியில் இருந்த ஒரு சிறிய கன்னிகையையும் நாம் காண்கிறோம். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. காரியங்கள் தோன்ற ஆரம்பித்தன; அடையாளங்களும் அற்புதங்களும் நிகழத் தொடங்கின. "41   அவள் தண்ணீர் கொண்டு செல்லும் போது, ​​இதே தேவதூதர் அவளைச் சந்தித்தார். தமஸ்கு செல்லும் வழியில் பவுலுக்கு முன்னால் ஒளிர்ந்தது போல ஒரு பெரிய ஒளி அவளுக்கு முன்னால் பிரகாசித்திருக்கலாம். அந்த ஒளியில் காபிரியேல் என்ற தேவதூதர் நின்று, ""வாழ்க, மரியாளே, ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப் பட்டவள். நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய், புருஷனை அறியாமல் நீ ஒரு குழந்தையைப் பெறப்போகிறாய்"" என்று சொன்னார்." "அதற்கு அவள், ""தேவன் விரும்பியபடியே எனக்கு ஆகக்கடவது"" என்றாள். இப்போது, ​​அவள் ஒருபோதும் தேவதூதரிடம் கேள்வி கேட்கவில்லை. அவள் அவரை நம்பினாள்." உங்களுக்குத் தெரியும், நான் நேற்று இரவு சொன்னது போல, இயேசுவின் பாதங்களைக் கழுவிய அந்தப் பெண்ணைப் போலவும் சில நேரங்களில்... இயேசுவின் பாதங்களைக் கழுவிய பெண்ணைப் பற்றிய என் கதை உங்களுக்குப் பிடித்திருந்ததா? ஓ, நான் அந்தப் பழைய பாணியிலான, உள்ளத்தை உருக்கும் வேதாகமக் கதைகளை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? 42 எனவே, நீங்கள் பார்க்கிறீர்கள், பெண்கள் சில நேரங்களில் அதைப் பிடித்துக்கொள்வார்கள் மற்றும்... இப்போது, ​​நீங்கள் இதைக் கவனிக்க வேண்டும். இப்போது, ​​உங்கள் அனைவருக்கும் தெரியும்... எனது உபதேசம் உங்களுக்குத் தெரியும், எனவே நீங்கள்... நீங்கள் பார்க்கிறீர்கள், நான் பெண் பிரசங்கியார்ளுக்கு எதிரானவன், ஏனென்றால் அது முற்றிலும் வேதாகமத்தின்படி என்று நான் நினைக்க வில்லை. அதை நிரூபிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும், பெண்கள் ஆவிகளை மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரங்களாக ( receptacle) இருக்கிறார்கள். நீங்கள் கவனிக்கவில்லை என்றால், தெருவில் உள்ள குறிசொல்லிகள் ( mediums) யார் என்பதைக் கவனியுங்கள். அது திருமதி இன்னார் ( Madam So-and-so) என்று இருக்கும். பார்க்கவும்? நீங்கள்... பின்னர் சுவிசேஷம் பெண்ணை வரிசைப்படுத்தி அவளுடைய இடத்தில் வைத்திருக்க வேண்டும். பார்க்கவும்? எனவே, ஆண்களை விடப் பல நேரங்களில் ஆவியை ஏற்றுக்கொள்வதில் அவள் அதிகமாக இருக்கிறாள். "43   எனவே, அந்தச் சிறிய மரியாள் தன் வழியில் சென்றுகொண்டிருந்தாள் என்பதையும், அவள் இந்தத் தேவதூதரைப் பார்த்தபோது, ​​அவள் கொஞ்சம் கூட சந்தேகிக்கவில்லை என்பதையும் நாம் காண்கிறோம். ""இதோ, ஆண்டவருடைய அடிமைப்பெண். உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"" என்று அவள் சொன்னாள். உடனடியாக, எந்த ஆதாரத்திற்கும் காத்திருக்காமல், ஏதேனும் ஒரு அடையாளத்தைப் பார்ப்பதற்குக் காத்திருக் காமல், தான் தாயாகப் போகிறாள் என்று தெரிந்து கொள்ளும் வரை காத்திருக்காமல், அவள் உடனே மகிழ்ச்சியுடனும், சந்தோஷத் துடனும், தேவனைத் துதித்தபடியும் புறப் பட்டாள்; ஏனென்றால் அவள் எந்தப் புருஷனையும் அறியாமல் இந்தக் குழந்தையைப் பெறப்போகிறாள், அது அவளுக்கு அவமானமாக இருந்தாலும், தேவன் அப்படிச் சொன்னதால் அவள் அதைப் பெறப்போகிறாள், அவள் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டாள். அதுதான் விஷயம்..." இன்று இரவு இங்கே நமக்கு இன்னும் அதிகமான மரியாள்கள் இருக்க வேண்டாமா? மினியாபோலிஸ் நகரத்திலும், உலகம் முழுவதும், தேவனை அவருடைய வார்த்தையின்படியே ஏற்றுக்கொண்டு எதையும் சந்தேகிக்காத யாராவது இருக்க வேண்டாமா? எந்த ஆதாரமும் கிடைப்பதற்கு முன்பே அது அப்படித்தான் என்று சொல்லுங்கள். "44  ""சகோதரர் பிரான்ஹாம்..."" என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் சக்கர நாற்காலிகளையோ அல்லது கட்டில்களையோ அல்லது ஒருவேளை இங்கே யாராவது நோயுற்றிருப்பதையோ காணவில்லை. இங்கே எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் இங்கே அமர்ந்திருக்கும் ஒருவருக்குக் கைகள் முடங்கியுள்ளது போன்ற கண் கூடாகப் பார்க்கக்கூடிய ஏதோ ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்காக ஜெபிக்கப்படுகிறது. ""சரி, என் கையில் எந்த முன்னேற்றமும் இல்லை"" என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது விசுவாசம் அல்ல. தேவன் சொன்னதால் இல்லாதவைகளை இருக்கிறவை களைப் போல அழைப்பதே விசுவாசம். பார்க்கவும்? அது உங்கள் ஊனத்தைப் பார்ப்பதில்லை. நாம் காணாதவைகளைப் பார்க்கிறோம். தேவன் வாக்குறுதி அளித்திருப் பதால் நாம் எதையும் பார்ப்பதில்லை [காணக்கூடியவைகளைப் பார்ப்பதில்லை]." """சரி, சாராள், உனக்கு அறுபத்தைந்து வயதாகிறது. நமக்குக் குழந்தை பிறக்கும் என்று அவர் சொன்னார். ஆனால் இந்த மாதத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதனால் நமக்குக் குழந்தை பிறக்காது என்று நினைக்கிறேன். அது ஒரு தவறு என்று நினைக்கிறேன். தேவன் என்னிடம் பேசவில்லை. தரிசனம் சரியாக இல்லை"" என்று ஆபிரகாம் பார்த்துச் சொல்லவில்லை. இல்லை, இல்லை. குழந்தை வரும் வரை இருபத்தைந்து ஆண்டுகளாக அவர் பலப்பட்டுக்கொண்டே இருந்தார், வெற்றியை உரிமை கோரினார். அது நாற்பத்தைந்து வருடங்களாக இருந்திருந்தாலும், அவர் அதைத் தொடர்ந்து உரிமை கோரியிருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் தேவனை விசுவாசித்தார். தேவன் அப்படிச் சொன்னதால், இல்லாத வைகளை இருக்கிறவைகளைப் போல அவர் எண்ணினார். இப்போது, ​​அது நல்லது." "45  இப்போது, ​​ஏன்... நீங்கள் கேட்கிறீர்கள், ""சகோதரர் பிரான்ஹாம், அங்கே நிற்கும்போது உங்களுக்கு ஏன் இவ்வளவு விசுவாசம் இருக்கிறது? ஒரு தவறு இருக்குமோ என்று நீங்கள் பயப்படவில்லையா?"" இல்லை ஐயா." """நீங்கள் தவறாக ஏதாவது சொல்லி விடுவீர்களோ என்று பயப்படவில்லையா?"" இல்லை ஐயா. தேவன் அப்படிச் சொன்னார். அது முடிந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம்." """நீங்கள் நுழையும் இந்தப் புதிய ஊழியத்தைக் குறித்து இப்போது நீங்கள் பயப்படுகிறீர்களா, அது இருக்கப்போகிறது என்று நினைக்கிறீர்களா... அதிக மேன்மை யானது என்று நீங்கள் சொல்கிறீர்களா?"" ஆம். ""உங்களுக்கு எப்படித் தெரியும்?"" தேவன் அப்படிச் சொன்னார். ஓ, எனக்குச் சிறிதளவு கூட சந்தேகம் இல்லை, அதை அடைவதற்கு என் இதயம் துடித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருக்கிறது. பார்க்கவும்? ஏனென்றால் தேவன் அப்படிச் சொன்னார், அது முடிந்துவிட்டது. அவ்வளவுதான் விஷயம். அது அப்படித்தான் இருக்கப் போகிறது. தேவன் அப்படிச் சொன்னார், அது முடிந்துவிட்டது." 46   பின்னர் அது உங்கள் ஜெபத்தில் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன்... [ஒலி நாடாவில் பதிவு இல்லாத இடம்] ஆம் ஐயா, ஏனென்றால் நான் செய்தது தவறு என்று தேவன் என்னிடம் கூறினார், அதனால் நான் அதற்காக வருந்துகிறேன். தேவன் சொல்வதே உண்மை. அது எனக்குச் சாதகமாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி, அது இன்னும் சரியானதுதான், ஏனென்றால் அது தேவன் . எனவே நாம் தேவனை அவருடைய வார்த்தையின்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மரியாள் தான் கர்ப்பமாகப் போவதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக்கொண்டே அந்த நாட்டின் வழியாகச் சென்றதையும், வயதான காலத்தில் தன் உறவினர் எலிசபெத் கர்ப்பமாகப் போகிறாள் என்று கர்த்தருடைய தூதர் அவளிடம் சொன்னதால் அவள் யூதேயாவுக்குச் சென்றதையும் நாம் காண்கிறோம். எலிசபெத் தன்னை ஆறு மாதங்கள் மறைத்து வைத்திருந்தாள். அது ஆறு... [ஒலி நாடாவில் பதிவு இல்லாத இடம்] மரியாளும் எலிசபெத்தும் ஒன்றுவிட்ட சகோதரிகள் ( first cousins) . 47   நாசரேத்திலிருந்து யூதேயாவின் மலைப் பகுதிக்கு ஓடி, காடுகள் மற்றும் மலைகளுக்குச் சென்று... ஓ, அவள் பார்த்தாள்... அவளுடைய உறவினர் எலிசபெத் தன்னை மறைத்து வைத்திருந்தாள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குழந்தைக்கு இன்னும் அசைவு இல்லாததால் அவள் கொஞ்சம் பயந்திருந்தாள். அதற்கு இன்னும் உயிர் வரவில்லை. ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. எனவே அது முற்றிலும் இயல்பற்றதாக இருந்தது. அவள் அவளைப் பார்க்க அங்கே ஓடினாள், அவள் தன்னை மறைத்து வைத்திருந்தாள், எனவே அவள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, ​​சிறிய மரியாள் அதன் வழியாக வருவதைக் கண்டாள், ஓ, அவளுடைய சிறிய முகம் பிரகாசித்துக் கொண்டிருந்தது... அவள் பதினெட்டு வயது மதிக்கத்தக்கவள், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். "48  எலிசபெத், ""உனக்குத் தெரியுமா, நான்... ஒருவேளை மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடந்திருக்கலாம்"" என்று சொல்லியிருப்பாள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் யோசேப்பிடம் அவள் எப்படிச் சொல்ல வேண்டியிருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அவளுக்கு அவனுடன் நிச்சயம் பண்ணப்பட்டிருந்தது. யோசேப்பு ஒரு தச்சன், அவன் ஒரு வீடு கட்டிக்கொண்டிருந்தான். ஓ, அவனால் நல்ல வீடுகளைக் கட்ட முடியும். அவன் ஒரு சிறப்புமிக்க வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தான், ஏனென்றால் அவன் தன் சிறிய காதலி மரியாளுடன் இதில் வசிக்கப் போகிறான்." "ஒரு நாள் சிறிய மரியாள் வாசலுக்கு நடந்து வந்து, ""யோசேப்பு, நாம் நம் நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நான் ஒரு குழந்தையைப் பெறப்போகிறேன்"" என்று சொல்லிவிட்டுச் சென்றாள். " "யோசேப்பின் இதயத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அது அவனுக்குள் எப்படி நொறுங்கிப் போயிருக்கும். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ""என்ன நடந்தது? ஓ, மரியாளிடத்தில் என்னால் அதை நம்ப முடியவில்லை. ஓ தேவனே, நீர் எனக்கு உதவ வேண்டும்.""" "49   அவன் அறைக்குள் செல்வதை என்னால் பார்க்க முடிகிறது, அவனது சிறிய அறைகள், கதவுகள் கச்சிதமாகச் செய்யப்பட்டிருந்தன, சிறிய படுக்கையறை எங்கே இருக்க வேண்டும் என்பது மற்றும் அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தன. அவன் அந்த அறைக்குள் சென்றபோது, ​​அன்று இரவு அவனால் சாப்பிட வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அவன் காத்திருந்து ஜெபித்தான். அவன் சொன்னான், ""தேவனே, என்னால் இதைத் தாங்க முடியவில்லை. நான் அந்தப் பெண்ணை நேசிக்கிறேன், இது எப்படி வந்தது? நான் உமக்கு உண்மையான ஊழியனாக இருந்திருக்கிறேன் அல்லவா?""" "இதோ, அன்று இரவு கர்த்தருடைய தூதர் அந்த அறைக்குள் வந்தார் (அவர் அதைச் செய்வார்), ""தாவீது குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்பட வேண்டாம்; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது"" என்று சொன்னார். ஆம் ஐயா. ஓ, என். யோசேப்பு அதைக் குறித்து மகிழ்ச்சிய டைந்தான். என்ன இருந்தது என்பதை அவன் கண்டான்... இது மிகவும் பெரியது, ஓ, ""தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது"" என்பது உங்களுக்குத் தெரியும்." 50  எனவே அவள் நாட்டுப்புறத்திற்குச் செல்கிறாள், அவள் எலிசபெத்தைப் பார்க்கப் போகிறாள். அவள் வருவதை எலிசபெத் பார்க்கிறாள். அவளுடைய சிறிய முகம் ரோஜாவைப் போலவும் அவளுடைய சிறிய கன்னங்கள் சிவந்திருப்பதையும் அவள் பார்க்கிறாள். அது மேக்ஸ் ஃபேக்டர்ஸ் ( Max Factors) அழகுசாதனப் பொருட்களினால் அல்ல, அது உண்மையில் பரிசுத்த ஆவியினால் பிறந்தது. அதுதான் சரி. அவள் மேலே செல்லும்போது மிகவும் அற்புதமான நேரத்தைக் கழித்தாள். "எலிசபெத் திரைச்சீலையை உயர்த்தி, வெளியே பார்த்து, ""ஓ, இதோ மரியாள் வருகிறாள். ஓ,"" என்று சொல்லி, ""சகரியா, நான் உன்னிடம் சொல்கிறேன், அவள் உள்ளே வரும்போது... நான் போய் அவளை அழைத்து வரவா?"" என்று கேட்டு, கதவைத் திறந்து வெளியே ஓடி, அவளைப் பிடித்து, சந்தித்து, அவளைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டதை என்னால் பார்க்க முடிகிறது." "51  உங்களுக்குத் தெரியும், மக்கள் ஒருவரை யொருவர் நேசிப்பது வழக்கம். இப்போது அவர்கள் அப்படிச் செய்வதில்லை. கொஞ்சம் உலர்ந்த கைகுலுக்கல், உங்களுக்குத் தெரியும், இப்படி உங்கள் கையை நீட்டுவது. ""நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?"" எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு ஒரு பெரிய பழைய பாணியிலான பம்ப்-கைப்பிடியை அடிப்பது போன்ற குலுக்கல் ( pump-handle shake) பிடிக்கும், அதை உங்களால் உண்மையில் உணர முடியும். உங்களுக்கு அது பிடிக்காதா?" "சற்று காலத்திற்கு முன்பு திரு. போஸ்வொர்த்... நாங்கள் மியாமியில் ஒரு கூட்டத்தில் இருந்தோம், அங்கே ஒரு டச்சஸ் ( Duchess - சீமாட்டி) இருந்தார். இப்போது, ​​அது என்னவென்று என்னிடம் கேட்காதீர்கள். அங்கே ஒரு பெரிய பெண்மணி இருந்தார், மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெபிக்கப்பட வேண்டும் என்பதற்காக முயன்று கொண்டி ருந்தார்கள். கூட்டத்திலிருந்து நான் வெளியே வந்த பிறகு, இப்போது அபிஷேகத்தின் கீழும் எல்லாவற்றிலும் இருந்த என்னை, சகோதரர் போஸ்வொர்த் என் கையைப் பிடித்து, ""ஓ, சகோதரர் பிரான்ஹாம், நமக்கு இந்த நிலத்தைத் தந்த டச்சஸ்..."" என்றார். ""அவர் வாசலிலேயே நிற்கிறார். நீங்கள் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்"" என்றார்." "நான் சொன்னேன், ""வெளியே இருக்கும் அந்த ஏழை நோயாளிகளைப் பற்றி என்ன? இன்னும் ஏதேனும் பலன் மீதமிருந்தால், நான் அவர்களைப் பார்க்கிறேன்?""" "52   அதற்கு அவர் சொன்னார், ""ஓ,"" ஆனால் ""அந்த டச்சஸ் மிகவும் அற்புதமான பெண்"" என்றார். மூன்று நான்கு வரவேற்பாளர்களும் சென்றார்கள். அங்கே ஒரு பெரிய பெண்மணி நின்று கொண்டிருந்தார். டச்சஸ்கள் அப்படித் தான் ஆடை அணிவார்கள் என்று நினைக்கிறேன், உலகம் முழுவதும் ஆயிரம் முறை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஒரு மிஷனரிக்குச் செலுத்தப் போதுமான நகைகள், பெரிய காதணிகள் தொங்கிக்கொண்டிருந்தன, அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு குச்சியில் ஒரு ஜோடி மூக்குக்கண்ணாடியை வைத்துக்கொண்டு, அவர்களை இப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள்... நான் இதை ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, ஏனென்றால் இது நகைச்சுவைக்கான இடம் அல்ல. ஆனால் உங்களுக்குத் தெரியும், அது போன்ற ஒரு குச்சியின் வழியாகப் பார்ப்பது." "அவர், ""நீங்கள் டாக்டர் பிரான்ஹாமா?"" என்று கேட்டார்." "நான், ""இல்லை, அம்மையாரே"" என்றேன். நான், ""நான் சகோதரர் பிரான்ஹாம்"" என்றேன்." "53   அவர் சொன்னார், ""சரி, டாக்டர் பிரான்ஹாம், உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,"" என்று தனது கையை இப்படி உயர்த்தினார். " "நான் எட்டி அவருடைய பெரிய பருமனான கையைப் பிடித்தேன். நான் சொன்னேன், ""இங்கே கீழே கொண்டு வாருங்கள், அப்போதுதான் உங்களைப் பார்க்கும்போது எனக்குத் தெரியும்."" பார்க்கவும்? எனவே அதுபோல." நான் கேலி செய்வதாக அர்த்தமில்லை. பார்க்கவும்? மக்கள் எப்படிப் பாசாங்கு செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை நான் சொல்கிறேன். பார்க்கவும்? பின்னர் நீங்கள் அன்பில்லாமல் பாராமுகமாக ஆகிவிடுகிறீர்கள். நான் உண்மையான அன்பை, கலப்படமற்ற அன்பை, உங்களால் உணரக்கூடிய ஒன்றை விரும்புகிறேன். "பால் ரேடர் ( Paul Rader) ஒருமுறை சொன்னார், ""சகோதரர் பில்லி, ஒரு நாள் காலையில் நான் என் மனைவியை விட்டுப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன்."" ""நாங்கள் மேஜையில் அமர்ந்திருந்தோம். நான் படுக்கையிலிருந்து தவறான பக்கத்தில் எழுந்திருந்தேன் (எரிச்சலுடன் இருந்தேன்), நான் அவளிடம் ஏதோ சொன்னேன், அது அவளுடைய மனதை நோகடித்தது என்று எனக்குத் தெரியும்."" ""நான் மன்னிப்பு கேட்கவே இல்லை"" என்றார்." "54  அவர் சொன்னார், ""அவள், 'பால், இன்று இரவு என்னுடன் எங்காவது வருவாயா?' என்று கேட்டாள்."" அதற்கு அவர் ""என்னால் முடியாது"" என்று சொல்லிவிட்டு அப்படியே சென்றார். ""நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன், அது என்னைக் கலங்க வைத்தது, நான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது."" ""ஒருவன் எப்படி உணருவான் என்று உங்களுக்குத் தெரியும்"" என்றார்." """நான் கதவு வழியாக வெளியே சென்றேன்"" என்றார். ""அவள் எப்போதும் என்னை வாசலில் சந்தித்து விடைபெறும் முத்தம் கொடுப்பாள்"" என்றார். ""அவள் அங்கே நின்று கொண்டி ருந்தாள். நான் அவளை முத்தமிட்டபோது, ​​'குட்பை (போய் வருகிறேன்)' என்று சொன்னேன். அவள், 'குட்பை' என்றாள்."" மேலும் அவர் சொன்னார்... வாசலின் நுனி வரை நடந்து சென்று, ""நான் கேட்டை மூடிவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது,"" ""அவள் எப்போதும் எனக்குக் கையசைத்து விடை பெறுவாள்"" என்றார். ""நான் திரும்பிப் பார்த்து, 'குட்பை' என்று சொன்னேன். அவள் 'குட்பை' என்றாள்.""" """தெருவில் நடந்து சென்றபோது, ​​நான் அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன்"" என்றார். ""என், என்னால் எப்படித் தாங்க முடியும்?"" என்றார். ""இன்று எனக்கு ஏதாவது நடந்தால் என்ன செய்வது? அவள் என் காதலி."" ""நான் சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லி விட்டேன்"" என்றார்." 55   அவரது இதயம் பெரிதாக வீங்கத் தொடங்கியது, திரும்பி மிக வேகமாக ஓடினார், கதவைத் திறந்துகொண்டு உள்ளே பார்த்தார். "யாரோ அழும் சத்தம் கேட்டது. அவள் கதவுக்குப் பின்னால் நின்று அழுது கொண்டிருந்தாள். அவர் சுற்றுமுற்றும் பார்த்து, அவளுடைய தோளைப் பிடித்து, அவளைத் திருப்பி, தன்னால் முடிந்தவரை அவளை முத்தமிட்டு, வெளியே வந்து கதவை மூடி, கேட்டைத் தாண்டிச் சென்று, ""குட்பை"" என்று சொன்னார். அவள், ""குட்பை"" என்றாள். அவர் சொன்னார், ""அவள் முன்பு செய்தது போலவே செய்தாள், ஆனால் கடந்த முறை அதில் ஒரு உணர்வு இருந்தது.""" கிறிஸ்துவை அறிவதைப் பற்றியும் அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் அவரை அறியலாம், ஆனால் அங்கே உணர்வு இருக்கிறதா, ஒரு உணர்வு, ஒரு உண்மையான அன்பு உணர்வு, ஒரு உண்மையான ஐக்கியம்? அதுதான் வழி, அதுதான் வெற்றியின் ரகசியம். பாசாங்கு இல்லாத உண்மையான கலப்படமற்ற அன்பு அதுதான். அது உண்மையானது, அது உண்மையானது என்று தேவனுக்குத் தெரியும். நீங்கள் உண்மையான கலப்படமற்ற அன்புடன் ஆண்டவரை நேசிக்கும்போது சாத்தானுக்கும் அது உண்மையானது என்று தெரியும். "56   மரியாளும் எலிசபெத்தும் ஒருவரை யொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு, ""ஓ, ஓ, உன்னைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்"" என்று சொல்வதை என்னால் பார்க்க முடிகிறது. " "எலிசபெத் கூறுகிறாள்... மரியாள் எலிசபெத்திடம், ""நீ எப்படி இருக்கிறாய்?"" என்று கேட்டாள்." """நன்றாக இருக்கிறேன்"" என்று சொன்னாள். அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள், ""நீ ஒரு குழந்தையைப் பெறப்போகிறாய் என்று நான் கேள்விப்பட்டேன்"" என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது." "அவள் சொன்னார், ""ஆம், அது சரி."" ஆனால் அவள், ""உனக்குத் தெரியுமா, நான் அதைப் பற்றிக் கவலையாக இருக்கிறேன்?"" என்றாள். அவள் சொன்னாள், ""குழந்தைக்கு இப்போது ஆறு மாதங்கள் ஆகிறது, நான் அதைப் பற்றிக் கொஞ்சம் கலக்கமடைந் திருக்கிறேன்.""" "மரியாள் சொன்னாள், ""அதை என்னிடம் சொன்ன கர்த்தருடைய தூதர், என்னைச் சந்தித்த பெரிய காபிரியேல் தூதர், நானும் ஒரு குழந்தையைப் பெறப்போவதாக என்னிடம் சொன்னார்.""" """நீயும் யோசேப்பும் திருமணம் செய்து கொண்டீர்களா?""" """இல்லை.""" """சரி, நீ எப்படிப் குழந்தையைப் பெறப் போகிறாய்?""" """புருஷனை அறியாமல் நான் ஒரு குழந்தையைப் பெறுவேன் என்று அவர் சொன்னார். அவர் தேவனுடைய குமாரனாக இருப்பார், நான் அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்."" அவள் ""இயேசு"" என்று சொன்ன அந்த நேரத்தில், சிறிய யோவான் உயிர் பெற்றுத் தன் தாயின் வயிற்றில் துள்ளத் தொடங்கினான்." 57  இயேசு கிறிஸ்துவின் நாமம் மனித உதடுகளின் வழியாகப் பேசப்பட்ட முதல் முறை, தாயின் வயிற்றில் இருந்த ஒரு உயிரற்ற குழந்தை உயிர் பெற்று மகிழ்ச்சியால் துள்ளிப் பரிசுத்த ஆவியைப் பெற்றது. அது அப்போது அதைச் செய்ய முடியுமானால், உண்மையாகவே விசுவாசிக்கிற... அந்த அற்புதமான இயேசுவின் நாமத்தை எடுத்துக்கொண்டு, அதினால் நடத்தப்படுகிற, மறுபடியும் பிறந்த சபைக்கு அது என்ன செய்ய வேண்டும். பின்னர் அந்த நாட்டில்... நமக்கு நேரம் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன், ஆனால் நம்மால் முடியாது. நான் நாடகத்தை விரும்புகிறேன், அதனால் என்னால் அதற்குள் செல்ல முடியாது. ஆனால் நாம் இன்னொரு நபரை எடுத்துக்கொள்வோம். அங்கே தேவாலயத்தில் சிமியோன் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தார், ஒரு அற்புதமான மனிதர், நல்ல மனிதர். அவர் வயதானவர், ஒரு நாள் அவர் தனியாகச் சிறிய ஜெபக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, ​​கிறிஸ்துவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காண்பதில்லை என்று பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து அவருக்கு வெளிப்படுத்தினார். 58   இப்போது, ​​எண்பது வயதுடைய ஒரு முதியவர், வெள்ளைத் தாடி தொங்கிக் கொண்டிருக்கிறது, உண்மையான வெள்ளை முடி அவரது தோள்களைச் சுற்றித் தொங்குகிறது, அவர் கிறிஸ்துவைக் காணும் வரை மரணத்தைக் காணப்போவதில்லை என்று சொல்வதைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தாவீது அவருக்காகக் காத்திருந்தார்; தீர்க்கதரிசிகள் அவரை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இங்கே இந்த மனிதர் கிறிஸ்துவைக் காணும் வரை தான் சாகப்போவதில்லை என்று சொல்கிறார். """அந்த வயதானவர் கொஞ்சம் பைத்தியமாகி விட்டார்"" என்று மக்கள் சொல்லியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். பார்க்கவும்? ஆனால் தேவனை விசுவாசிக்கும், ஆவியான வரால் நடத்தப்படும் ஒரு மீதமான கூட்டம் தேவனிடம் எப்போதும் உண்டு, அவர்கள் பைத்தியம் என்று அழைக்கப்படுவார்கள். அதை நீங்கள் நம்புகிறீர்களா? ""மனுஷர் உங்களை நிந்தித்து... உங்களுக்கு விரோதமாய்ப் பலவித தீமையான மொழிகளையும் சொல்வார்களானால் நீங்கள் பாக்கியவான்கள்.""" "59   அவரைக் கவனியுங்கள். அவர் சுற்றித் திரிந்து, மக்களிடம் சொல்லிக்கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். சிலர், ""ஓ, அந்த வயதானவர் கொஞ்சம் புத்தி பேதலித்தி ருக்கிறார்"" என்கிறார்கள். ஆனால் ஒரு நாள்... உங்களுக்குத் தெரியும், அப்போது செய்திகள் மெதுவாகப் பரவின. இன்றைக்கு நம்மிடம் உள்ளது போலத் தொலைபேசி, தொலைக்காட்சி ஆகியவை அவர்களிடம் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைச் செய்திகளில் வெளி யிட்டிருந்தால், அவர்கள் அவரை விமர்சித்தி ருப்பார்கள். அவர்கள் அதை அப்படித்தான் செய்திருப்பார்கள். அவர்கள் அவரை விமர்சித்திருப்பார்கள். எனவே அவர்கள்... ஆனால் எப்படியிருந்தாலும், செய்தி மெதுவாகப் பயணித்தது." இயேசு பிறந்து எட்டு நாட்களுக்குப் பிறகு, அவர் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார். குழந்தையின் விருத்தசேதனம் மற்றும் தாயைச் சுத்திகரிப்பதற்காக, அவர் ஏழைகளுக்குரிய பலியைச் செலுத்தப் போகிறார். "60  விருத்தசேதனத்திற்காக அவர்கள் வெளியே வரிசையில் நின்று கொண்டி ருந்தபோது, ​​பின்புறம் ஒரு சிறிய அறையில் யாரோ ஒருவர், சிமியோன் என்ற பெயருள்ள ஒரு வயதான ஆசாரியர், அங்கே அமர்ந்து சுருளை வாசித்துக்கொண்டிருந்தார், ""நாம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து... கர்த்தரோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப் பண்ணினார்,"" என்று வாசித்துக்கொண்டிருந்தார்." "பரிசுத்த ஆவியானவர், ""சிமியோனே?"" என்றார்." """ஆம், ஆண்டவரே.""" """எழுந்து நில்.""" """ஆம், ஆண்டவரே.""" """நடக்க ஆரம்பி.""" """எந்த வழியில், ஆண்டவரே?""" """நீ நட, நான் வழிநடத்துகிறேன்."" ஆமென். அவர் அப்படித்தான் செய்கிறார். ""நீ நட, நான் வழிநடத்துகிறேன்.""" 61   இங்கே அவர் தனது... பெரிய... அது திங்கட்கிழமை காலை என்று வைத்துக் கொள்வோம். ஓ, ஒவ்வொரு இரவும் நூற்றுக் கணக்கான சிறிய குழந்தைகள் பிறக்கின்றன, அவர்கள்... குழந்தையின் விருத்தசேதனத் திற்காகவும், சுத்திகரிப்பு பலிக்காகவும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் வரிசையில் நிற்கிறார்கள். "அந்த வரிசையின் ஓரத்தில், இங்கே வெளியே ஒரு சிறிய கன்னிப்பெண் நிற்கிறாள். நிறையச் சிறிய குழந்தைகள் நேர்த்தியான பின்னல் வேலைப்பாடுகளுடனும், அழகான சிறிய இளஞ்சிவப்பு நிற ஆடைகளுடனும், மிகவும் அழகான சிறிய விஷயங்களுடனும் இருக்கிறார்கள், உங்களுக்குத் தெரியும், இங்கே கீழே ஒரு சிறிய கன்னிப்பெண்ணுடன் ஒரு சிறிய குழந்தை நிற்கிறது. அவர்களில் சிலர், ""ஏய், அந்த அவதூறை நீங்கள் கேள்விப்பட்டீர்களா? வதந்தி உங்களுக்குக் கிடைத்ததா? அங்கே அந்தப் பெண்ணும் இங்கே முறைகேடாகப் பிறந்த அந்தக் குழந்தையும் இருக்கிறார்கள். அவளுக்கும் யோசேப்புக்கும் இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. அங்கே அவள் அந்தக் குழந்தையை வைத்திருக்கிறாள். ம்ம்-ஹூம், நான் உன்னிடம் சொன்னேன். ம்ம்-ஹூம். எனக்குத் தெரியும்"" என்கிறார்கள். பார்க்கவும்? அது பிசாசு. அங்கே அது அமர்ந்திருக்கிறது. ""அதனால் விலகியே இருங்கள். அவளிடமிருந்து விலகிச் செல்லுங்கள்."" இன்றும் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ""அந்தக் கூட்டத்திலிருந்து உங்களால் முடிந்தவரை விலகி இருங்கள்"" என்று அவர்கள் சொல்கிறார்கள். பார்க்கவும்? எனவே அவர்கள் பின்வாங்குகிறார்கள்." 62   அங்கே அவள் நிற்கிறாள். ஆனால், முகத்தில் ஒரு சிறிய முக்காடு அணிந்திருந்த சிறிய மரியாள், அது யாருடைய குழந்தை என்பதை அறிந்திருந்தாள். தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒவ்வொரு மனிதனும், தான் எங்கே நிற்கிறோம் என்பதை அறிவான். உலகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் தன் இதயத்தில், அல்லது அவள் இதயத்தில், அது யாராக இருந்தாலும், எதைத் தொட்டில் இட்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அங்கே என்ன இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். உலகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் விரும்பும் எதையும் சொல்லி அவர்களை அழைக்கலாம். நீங்கள் அவர்களை ஒருபோதும் அசைக்க முடியாது. அது சரி. ஏனென்றால் தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை, அவிசுவாசம் கொள்வதில்லை. பார்க்கவும்? "இப்போது, ​​அவர்கள்... இதோ சிமியோன் அந்த வரிசையின் வழியே வெளியே வருகிறார், அந்த வரிசையை அடைந்து நேராகக் கீழே வந்து அந்தக் குழந்தைக்கு முன்னால் நின்று, குனிந்து தாயின் கைகளிலிருந்து அதை எடுக்கிறார், கண்ணீர் அவரது கன்னங்களில் வழிந்தோடி அவரது வெள்ளைத் தாடியில் சொட்டுகிறது. அவர், ""ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனைச் சமாதானத்தோடே போகவிடுகிறீர், ஏனென்றால் என் கண்கள் உமது இரட்சணியத்தைக் கண்டன"" என்றார்." ஓ, என்னே. அதே பரிசுத்த ஆவி இன்று இரவும் வழிநடத்துகிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவர் இன்று இரவு இங்கே அதே பரிசுத்த ஆவியாக இருக்கிறார். 63   லியோ சற்று நேரத்திற்கு முன்பு வருவதையும், அல்லது ஜீன் இங்கே கீழே அமர்ந்திருப்பதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன், இந்தப் பையன்கள். ஒரு சிறிய கதை, நீண்ட காலத்திற்கு முன்பு நடக்காத ஒரு சிறிய கதை. நம் வாழ்வில் நாம் மக்களிடம் சொல்லாத பல காரியங்கள் என் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் நடக்கின்றன. இந்தச் சிறிய கதையைச் சொன்ன உடனேயே நாங்கள் ஜெப வரிசையைத் தொடங்குவோம். நாங்கள் அமர்ந்திருந்தோம்... நான் அவர்களைப் பையன்கள் என்று அழைக்கிறேன். அங்கே ஒருவித... நான் அவர்களை என் மாணவர்கள் என்று அழைக்கிறேன். அது பரவாயில்லை சகோதரரே, இல்லையா ஜீன்? சரி. எனவே நான் அவர்களை என் மாணவர்கள் என்று அழைக்கிறேன். நான் அவர்களைச் சந்தித்தேன், குழப்பமாக இருப்பதைப் பற்றிப் பேசினால், அவர்கள் அப்படி இருந்தார்கள். அவர்கள் ஒருமைக்கொள்கைக்காரர்களா ( One ness) , இருமைக்கொள்கைக்காரர்களா ( Twoness) , மும்மைக் கொள்கைக்காரர்களா ( Threeness) , திரித்துவவாதிகளா ( Trinitarians) , இயேசு மட்டுமா ( Jesus Only) , அல்லது அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை. 64   ஆனால் ஆண்டவர் அவர்களுக்கு உதவி, அவர்களை அற்புதமாக ஆசீர்வதித்தார். அவர்கள் என் கூட்டத்தைப் பின்தொடர்ந்து FBI ஏஜெண்டுகளைப் போல நேராக ஜெஃபர்சன் வில்லுக்கு வந்தார்கள், முதலில், அந்தக் காரியங்கள் உண்மையிலேயே மெய்யானவையா என்று பார்க்கவும், இங்கே வருவது போலவே வீட்டிலும் தரிசனங்கள் வருகின்றனவா என்று பார்க்கவும், அது சரியானதா இல்லையா என்று பார்க்கவும் வந்தார்கள். அவர்கள் ஜெஃபர்சன் வில்லில் ஒரு சிறிய இடத்த வாடகைக்கு எடுத்து, எது சரியானது என்று தெரிந்து கொள்ளும் வரை தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். இப்போது, அவர்கள் அற்புதமான பையன்கள். அவர்கள் இருவரும் இங்கே இருக்கிறார்கள், செய்திகளின் பதிவுகளை ( recordings) எடுக்கிறார்கள், ஆண்டவர் சித்தமானால், நாங்கள் தொடர்ந்து செல்லும் போது அவர்களும் கூடாரக் கூட்டங்களில் என்னுடன் இருப்பார்கள். இப்போது, கடந்த முறை (அது ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், இல்லையா, அல்லது ஜூன், எங்கேயோ, ஜூன் அல்லது ஜூலை)... அவர்கள் வராண்டாவில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அங்கே வெளியே அமர்ந்து அவர்களுடன் பேசிக் கொண்டி ருந்தோம். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஒரு இளம் கருப்பினப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள். அவள் அதை விரும்பவில்லை, அவள் அதை ஒரு போர்வையில் ( quilt) சுருட்டி, ஒரு வாடகைக் காரை ( cab) எடுத்துக்கொண்டு, பாலத்தின் மீது சென்று, குழந்தையை அழிப்பதற்காக அங்கிருந்து தண்ணீரில் போட்டாள். "65  எனவே, நாங்கள் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நான் சொன்னேன், ""ஒரு குழந்தையைப் போர்வையில் அமுக்கி ஆற்றில் போடும் ஒரு நபரின் கொடூரமான இதயத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள்."" நான் சொன்னேன், ""அப்படிப்பட்ட ஒரு நபரைத் தேவன் என்ன செய்வார் என்று எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பாவமுள்ள ஆத்துமாவுக்காக நான் ஜெபிக்கிறேன்,"" அதுபோலச் சொன்னேன்." கூட்டத்தில் புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் திரு. மற்றும் திருமதி வுட் அங்கே இருந்தார்கள். திருமதி வுட் ஒரு கால்நடை மருத்துவர் ( veterinary) . அடுத்து உள்ளே வந்தது திரு. கில்மோர், அவர் பால்காரர், என்னுடைய நண்பர் அங்கே நின்று கொண்டிருந்தார். சுமார் காலை பத்து மணியளவில்... நான் வனம் மற்றும் விலங்குப் பாதுகாப்புத் துறையில் ( conservation) வேலை செய்திருக்கிறேன், அதனால் நான் விலங்குகளின் வாழ்க்கையைப் படித்தேன். நான் வாழ்கிறேன்... ஓ, காடுகளில் இருப்பதுதான் எனக்கு இரண்டாவது சுபாவம். 66  நான் மெக்சிகோவில் உள்ள காடு களுக்குச் செல்லவிருக்கிறேன், பின்னர் அங்கரேஜ், அலாஸ்கா வரை செல்ல விருக்கிறேன். அதற்குள் செல்ல என்னால் காத்திருக்க முடியவில்லை, ஏனென்றால் அங்கேதான் நான் தேவனை காண்கிறேன், காடுகளில் நான் தனிமையில் இருக்கும்போது. அது சிறப்பாக இருக்கும். என் தாய் கிட்டத்தட்ட பாதி இந்தியப் (செவ்விந்திய) பழங்குடிப் பின்னணியைக் கொண்டவர். இயற்கையை நேசிக்கவும் காடுகளில் இருக்கவும் அதுவே எனக்குப் போதுமானதாக இருக்கிறது. எனவே, நான் பார்த்துக் கொண்டிருந்தேன், சாலையின் வழியே மேலே வந்து கொண்டிருந்தது. எனக்குக் கீழே ஒரு நகரத் தெரு ( city block) அளவுக்குத் தொலைவில் உள்ள ஆர்க்டிக் ஸ்பிரிங்ஸ் காடுகளிலிருந்து, யூடிகா பைக்கைக் கடந்து, சாலை வழியாக மேலே வருவதைக் கவனித்தேன், மற்ற நான்கு வீடுகளைக் கடந்து, ஒரு அப்போஸம் ( opossum - ஒரு வகை பைக்கருவூலப் பாலூட்டி விலங்கு) வந்து கொண்டிருந்தது. அந்த அப்போஸம் வரும்போது அதன் ஒரு பக்கத்தை இழுத்துக்கொண்டு வந்தது. அது சாலை வழியாக மேலே நகர்ந்து அந்த இடத்திற்கு வரும்போது, ​​வேலி இல்லாத அந்த வீடுகள் அனைத்தையும் கடந்து என் இடத்திற்கு வந்தது. நான் அங்கே போதகர் இல்லத்தில் வசிக்கிறேன், அதைச் சுற்றி ஒரு சிறிய கற்சுவரும், மறுபுறம் பலகை வேலியும் இருந்தது, அது வாசலுக்குள் திரும்பி, வீட்டை நோக்கி வர ஆரம்பித்தது. "67   நான் சொன்னேன், ""பாருங்கள். அங்கே ஒரு அப்போஸம் இருக்கிறது. அதற்கு வெறிநாய்க்கடி நோய் ( rabies) பிடித்திருக்கிறது."" பார்க்கவும், அது பகலில் பயணம் செய்யாது. ஒரு அப்போஸம் பகல் நேரத்தில் குருடாக இருக்கும், அவை இரவில்தான் பயணம் செய்யும். எனவே நான் சொன்னேன், ""பாருங்கள், அங்கே ஒரு அப்போஸம் இருக்கிறது, அதற்கு வெறிநாய்க்கடி நோய் பிடித்திருக்கிறது. ஏதோ ஒன்று அதைத் தாக்கியிருக்கிறது."" நான் சொன்னேன், ""பாருங்கள், அது முழுவதுமாக நசுங்கிப் போயிருக்கிறது.""" "எனவே அது வீட்டிற்கு வராமல் தடுக்க நான் முற்றத்திற்கு ஓடினேன். திரு. வுட் முற்றத்தில் ஒரு மண் வாரி ( yard rake) மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தார். எனவே நான் அந்த மண் வாரியை எடுத்தேன், ஜீன் மற்றும் லியோ, மற்றும் அவர்களும் என்னுடன் வெளியே வந்தார்கள். நான் மண் வாரியை அந்த அப்போஸம் மேல் போட்டேன். பொதுவாக அவை ""அப்போஸம் போல நடித்தல்"" (" play opossum) என்று சொல்வார்களே அதைச் செய்யும், அதாவது சும்மா படுத்துக் கொள்ளும். ஆனால் இது அப்படிச் செய்யவில்லை, அது... அவள் அதைப் பற்றிக்கொண்டாள். 68   அவளுடைய இடது தோள்பட்டை முழுவதையும் நான் பார்த்தேன், அது நாய்களால் கடிக்கப்பட்டிருந்தது, அல்லது ஒரு காரால் ஏற்றப்பட்டிருந்தது. இந்தத் தட்டையான வார்த்தைகளை மன்னிக்கவும், ஆனால் ஈ முட்டைகள் ( flyblows) அது முழுவதிலும் இருந்தது, ஈக்கள் மொய்த்து முட்டையிட்டிருந்த இடத்தில், இங்கே அடியில் புழுக்கள் ( maggots) நெளிந்து கொண்டிருந்தன, பச்சையான ஈக்கள் அது முழுவதும் இருந்தன. அது பார்ப்பதற்கு ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது. அவள் அந்தக் காலை இழுத்துக் கொண்டிருந்தாள். "நான் சொன்னேன், ""ஓ, அவள் காயப்பட்டிருக்கிறாள். அனேகமாக இதன்பிறகு அவளுக்கு வெறிநாய்க்கடி நோய் வந்திருக் கலாம், அதுதான் இதைச் செய்திருக்கிறது."" அவள் அந்த மண் வாரியைக் கடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளை விடுவித்த உடனேயே, அவள் மீண்டும் ஆரம்பித்தாள். நான் மீண்டும் மண் வாரியை அவள் மேல் போட்டேன். தற்செயலாக நான் கவனித்தேன். அவளுடைய..." 69   உலகிலேயே குட்டிகளைச் சுமந்து செல்லும் பையை ( pocket) வைத்துள்ள இரண்டு விலங்குகள் அப்போஸம் மற்றும் கங்காரு மட்டுமே. எனவே, அவளுடைய பை கீழே இறங்கியிருந்தது, அவளிடம் சுமார் இவ்வளவு சிறிய அளவில், வழுவழுப்பான ஒன்பது சிறிய குட்டிகள் இருந்தன, மிகச் சிறிய குட்டிகள். "நான் சொன்னேன், ""ஓ, அதனால்தான் அவள் சண்டையிடுகிறாள். அவளைப் பாருங்கள்."" நான் சொன்னேன், ""இப்போது, ​​ஜீன், லியோ, மற்றும் சுற்றி நிற்கும் நீங்கள்,"" நான் சொன்னேன், ""தன் குழந்தையை நீரில் மூழ்கடிக்க முயன்ற அல்லது மூழ்கடித்த அந்தக் கருப்பினப் பெண்ணை விட, இந்தத் தாய் அப்போஸத்திடம் உண்மையில் ஒரு பெண்ணுக் குரிய தன்மை அதிகமாக இருக்கிறது.""" "நான் சொன்னேன், ""நீங்கள் பார்க்கிறீர்கள், அந்தப் பெண், ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் போர்வையில் அமுக்கி, அதைத் தனக்கு வேண்டாம் என்பதற்காக ஆற்றில் போட்டாள். அவள் சுற்றித் திரியவும், தன் இஷ்டம்போல நடக்கவும் விரும்பினாள். ஆனால் இந்த வயதான தாய் அப்போஸத்திற்கு வாழ்வதற்கு அனேகமாக இன்னும் இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை இருக்கலாம், அவள் தன் குட்டிகளுக்காகச் சண்டையிட்டு அந்த நேரத்தைச் செலவிடுவாள். இவள் ஒரு உண்மையான தாய்.""" "70   அவர்கள் அனைவரும், ""ஆம், அது சரி"" என்று சொல்லத் தொடங்கினார்கள். நான் அவளை விட்டுவிட்டேன். நான் அவளை விட்டபோது, ​​அவள்... அந்தச் சிறிய அப்போஸம் குட்டிகள் சேகரிக்கப்பட்டன, அவளால் முடிந்தவரை வேகமாக அந்தக் காலை இழுத்துக்கொண்டு அவள் சென்றாள், நேராக என் படிக்கட்டுகளுக்குச் சென்று, அங்கே விழுந்து சோர்ந்துபோய், மயக்கமடைந்தாள்." நான் மேலே சென்றேன். நாங்கள் அவளைத் தள்ளினோம். அது சரியா? நாங்கள் அவளைத் தள்ளி, அவளை நகர வைக்க முயற்சித்தோம், ஆனால் அவள் நகரவே இல்லை. அவள் அங்கேயே படுத்திருந்தாள். "சரி, திருமதி வுட் மேலே வந்தார். அவர், ""சகோதரர் பிரான்ஹாம்..."" என்றார். அவளுடைய பை... நிச்சயமாக அவள் படுக்கும் போது, ​​அது வெளியே தெரிந்தது; சிறிய குட்டிகள் அங்கே பால் குடித்துக் கொண்டிருந்தன. திருமதி வுட் ஒரு கால்நடை மருத்துவராக இருப்பதால், அவர் சொன்னார், ""சகோதரர் பிரான்ஹாம், இப்போது பாருங்கள், போய் அந்த அப்போஸத்தைக் கொன்று விடுங்கள். பார்க்கவும்? அந்தச் சிறிய அப்போஸங்களை, அவற்றை எடுத்துத் தரையில் வீசிக் கொன்றுவிடுங்கள்,"" சொன்னார், ""ஏனென்றால் அந்தப் பாவப்பட்ட சிறிய ஜீவன்கள்,"" சொன்னார், ""அந்தப் பழைய திரிந்துபோன பால் மற்றும் மற்றவைகளை, அவள் இறந்த நிலையில் குடித்தால்,"" சொன்னார், ""அவை-அவை-அது... அவள் இறந்து விடுவாள், அல்லது அந்தச் சிறிய குட்டிகள் இறந்துவிடும், ஒரு பயங்கரமான மரணத்தை அடையும்.""" "சொன்னார், ""அவை பாட்டிலில் பால் குடிப்பதற்கு மிகவும் சிறியவை. எப்படி யிருந்தாலும் அவற்றுக்கு வட்டமான வாய் இருக்கிறது. உங்களால் அதைச் செய்ய முடியாது."" சொன்னார், ""நீங்கள் அவற்றைக் கொன்றுவிடுவது நல்லது.""" "நான் சொன்னேன், ""என்னால் அதைச் செய்ய முடியாது, சகோதரி வுட்.""" "அவர் சொன்னார், ""நீங்கள் ஒரு வேட்டைக்காரர் தானே?""" "நான் சொன்னேன், ""ஆம், ஆனால் நான் ஒரு கொலைக்காரன் அல்ல.""" "71  அவர் சொன்னார்-அவர் சொன்னார், ""சரி-சரி, பாருங்கள், சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் ஏன் உள்ளே சென்று உங்கள் துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து அவற்றைச் சுடக்கூடாது?""" "நான் சொன்னேன், ""என்னால் அதைச் செய்ய முடியாது.""" "அவர் சொன்னார், ""சரி, பேங்க்ஸை ( Banks) விடுங்கள்."" அது அவருடைய கணவர். ""அவர்-அவர் அவற்றைக் கொல்லட்டும்.""" "நான் சொன்னேன், ""இல்லை, அவர் செய்வதை நான் விரும்பவில்லை.""" "சொன்னார், ""அந்தப் பாவப்பட்ட ஜீவன் அந்த வெயிலில் கிடப்பதையும், அந்தப் பாவப்பட்ட சிறிய குட்டிகள் அந்த இறந்த தாயிடம் பால் குடிப்பதையும் நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா?""" "நான் சொன்னேன், ""அவள் முழுவதுமாக இறக்கவில்லை."" நான் அவளை உதைப்பேன், எப்போதாவது ஒருமுறை அங்கே அவளுடைய தாடையில் ஒரு சிறிய அசைவை நீங்கள் பார்க்கலாம்." """ஏன்,"" சொன்னார், ""அந்தப் பாவப்பட்ட ஜீவனைப் பாருங்கள். அவள் சாகும் தருவாயில் இருக்கிறாள். அவள் மயக்கமடைந்துவிட்டாள். அவள் ஒருபோதும் மீண்டும் சுயநினைவுக்கு வரமாட்டாள்.""" "சரி, நான் சொன்னேன், ""என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னால் அவளைக் கொல்ல முடியாது.""" "72   அவர் சொன்னார், ""சரி, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"" சரி, நான் அவள் மீது தண்ணீர் ஊற்றினேன், மற்றும் எல்லாம் செய்தேன், அவளிடமிருந்து ஈ முட்டைகளைக் கழுவ முயற்சித்தேன். அது எந்தப் பலனும் அளிக்கவில்லை. அவள் சுயநினைவுக்கு வரவே இல்லை." "எனவே அந்தப் பாவப்பட்ட சிறிய அப்போஸம் குட்டிகள் குடித்துக் கொண்டே இருந்தன, நான் நினைத்தேன், ""பாவப்பட்ட சிறிய ஜீவன்."" பின்னர் நாங்கள் நாள் முழுவதும் அப்படியே சென்றோம், மக்கள் வந்தார்கள், போனார்கள், நாள் முழுவதும் எதுவும்... அவள் இன்னும் வெயிலில் கிடந்தாள்... இரவில் அவள் மீது முழுவதும் உண்மையில் ஈக்கள் மொய்த்து முட்டையிட்டிருந்தன." "எனவே திரு. வுட் மேலே வந்து, ""இப்போது, ​​சகோதரர் பிரான்ஹாம், இன்று நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீர்கள் (அதிகம் வேலை செய்துவிட்டீர்கள்)"" என்றார். ""நீங்கள் இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்"" என்றார். அவர் தன் மனைவியையும், என்னையும், என் மனைவியையும் அழைத்துக் கொண்டு சவாரிக்குச் சென்றார்." "சாலையில் செல்லும்போது, ​​நான் அதை ஒருபோதும் மறக்க மாட்டேன்; சாலையில் ஒரு சிறிய நாய் படுத்திருப்பதை நாங்கள் கடந்தோம். நான் சொன்னேன், ""நிறுத்துங்கள். நாம் அதை எடுப்போம்.""" நான் திரும்பிச் சென்றேன், அந்தப் பாவப்பட்ட சிறிய நாய் முழுவதுமாகச் சொறி சிரங்கு ( mange) பிடித்திருந்தது, என் கை முழுவதும் பேன்கள் ( "fleas) ஊர்ந்து கொண்டிருந்தன. நான் சொன்னேன், ""பாவப்பட்ட சிறிய ஜீவன்.""" "சகோதரி வுட் சொன்னார், ""இப்போது, ​​நீங்கள் அதைக் கொல்லப்போவதில்லை என்று நினைக்கிறேன்.""" "நான் சொன்னேன், ""நிச்சயமாக நான் அதைக் கொல்லப்போவதில்லை. நான் அதற்காக ஜெபிக்கப் போகிறேன்.""" "அவர் சொன்னார், ""சகோதரர் பிரான்ஹாம்,"" சொன்னார், ""அந்தச் சொறி சிரங்கும் அந்தப் பாவப்பட்ட... பாருங்கள், இப்போது அது முழுவதும் பேன்கள் நிறைந்திருக்கிறது.""" "நான் சொன்னேன், ""நான் அதை என் காருக்குள் வைக்கிறேன்."" நான் அதை என் காருக்குள் வைத்தேன்." "சொன்னார், ""சரி, பேன்கள் நம்மைச் சுற்றிலும் வந்துவிடும்.""" "73   நான் சொன்னேன், ""நான் அதை ஒரு சாக்குப்பையில் போடுகிறேன்."" நான் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு, அதைக் கட்டி, காரில் வைத்து, வீட்டிற்குச் சென்று, அதற்காக ஜெபித்து, அதற்காக வேலை செய்தேன்." பையனே, அது இப்போது ஒரு பெரிய நல்ல கோலி ( collie) நாய், நீங்கள் பார்த்ததிலேயே அழகான நாய். அப்படிச் செய்வதில் (கொல்வதில்) எந்தத் தேவையும் இல்லை. காரியங்களைக் குறித்து அவ்வளவு கொடூரமாக இருக்காதீர்கள். எனவே அந்த-எனவே அடுத்த... "நாங்கள் பதினொரு மணிக்கு உள்ளே வந்தோம்; அந்தச் சிறிய பழைய அப்போஸம் இன்னும் அங்கே கிடந்தது, இன்னும் மயக்கமடைந்திருந்தது. சகோதரர் வுட் சொன்னார், ""இப்போது, ​​அவள் ஒருபோதும் நகர மாட்டாள்."" ""அவள் இப்போது இறந்து விட்டாள்"" என்றார்." "நான், ""ஒருவேளை அவள் இருக்கலாம்"" என்றேன்." பின்னர், பில்லி பால் ஆற்றில் எங்கேயோ மீன்பிடிக்கச் சென்றிருந்தான், அவன் நள்ளிரவுக்குப் பிறகு உள்ளே வந்தான். அவன் வந்தபோது, ​​அங்கே அப்போஸம் இன்னும் கிடந்தது. மறுநாள் காலையில் நான் எழுந்தேன். அந்த அப்போஸத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு, இரவு முழுவதும் என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை. மறுநாள் காலையில் நான் சுமார் ஏழு மணிக்கு மிகவும் சீக்கிரம் எழுந்தேன், வெளியே சென்றேன், அங்கே கிடப்பதைப் பார்த்தேன், அங்கே அந்தப் பழைய அப்போஸம் கிடந்தது. என் சிறிய மகள், மிகவும் ஆவிக்குரியவள், அவள் தன் சிறிய தூங்கும் உடையில் ( pajamas) வெளியே வந்தாள். "அவள், ""அப்பா, அந்த அப்போஸத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?"" என்று கேட்டாள்." "நான், ""கண்ணே, எனக்குத் தெரியாது"" என்றேன்." """அவள் இறந்து விட்டாளா?"" என்று கேட்டாள்." "நான், ""எனக்குத் தெரியாது"" என்றேன்." "74   நான் அவளைப் பார்த்தேன், அந்தப் பாவப்பட்ட சிறிய அப்போஸம் இன்னும் அங்கே கிடந்தது, உங்களுக்குத் தெரியும். நான் நினைத்தேன், ""அது பரிதாபமாக இருக்கிறது அல்லவா?"" நான் நினைத்தேன், ""அதைக் கொன்று விடுவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன், ஆனால் எப்படியோ என்னால் அதைச் செய்ய முடியவில்லை.""" "அவள் சொன்னாள், ""அப்பா. அந்தப் பாவப்பட்ட வயதான தாய்,"" சொன்னாள், ""அவள் இறந்துவிட்டாளா?""" "நான், ""நான் பார்க்கிறேன்"" என்றேன். நான் அவளைக் கொஞ்சம் உதைத்து, அவளை முன்னும் பின்னும் தள்ளினேன். இல்லை, அவளுக்கு இன்னும் உயிர் இருந்தது. எனவே, நான் சென்றேன். நான் சொன்னேன், ""எனக்குத் தெரியாது, கண்ணே."" நான் சொன்னேன், ""நீ மீண்டும் படுக்கைக்கு ஓடுவது நல்லது, ஏனென்றால் அம்மா இன்னும் எழவில்லை.""" "எனவே நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம். நான் என் தனி அறைக்குச் ( den room) சென்றேன், அங்கேதான் தரிசனங்கள்...?... பல. நான் அங்கே அமர்ந்தேன், நான் என் கைகளை இப்படி உயர்த்தினேன், ""தேவனே, அந்தப் பழைய அப்போஸத்தைக் குறித்து நான் என்ன செய்ய முடியும்?"" என்று நினைத்தேன். நான் சொன்னேன், ""நான்... இன்று,"" நான் சொன்னேன், ""அது அங்கே கிடக்கிறது. அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.""" "75   சரியாக அப்போது... இப்போது நீங்கள், இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது; அது உங்கள் விருப்பம். நான் ஒரு குரலைக் கேட்டேன், ""நீ நேற்று அவளை ஒரு பிரசங்கத்திற்காகப் பயன்படுத்தினாய், அவள் ஒரு உண்மையான தாய் என்று சொன்னாய்"" என்றது." "நான் சொன்னேன், ""அது சரி, நான் செய்தேன்."" நான் சொன்னேன், ""அவள் ஒரு உண்மையான தாய்.""" "சொன்னார், ""ஒரு பெண்மணியைப் போல, அவள் உன் வீட்டில், உன் வாசலிலேயே இப்போது கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரமாகக் கிடக்கிறாள், ஜெபிக்கப்படுவதற்காகத் தன் முறைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் குட்டிகளை வளர்ப்பதற்காக வாழ விரும்புகிறாள். ஆனால் நீ அவளைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.""" "நான் சொன்னேன், ""சரி, எனக்குத் தெரியாது அவள்... அவள் வந்தாள் என்று...""" "நான் நினைத்தேன், ""என்ன விஷயம்? நான் எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேனா?"" நான் நினைத்தேன், ""எனக்கு என்ன ஆயிற்று?"" நான் எழுந்தேன்; ""அது-அது பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்"" என்று நினைத்தேன். நான்... பெக்கி ( Becky)" " வெளியே பார்த்துக் கொண்டு மற்றொரு வாசலில் நின்று கொண்டிருந்தாள், நான் வெளியே சென்றேன். ""எங்கே போகிறீர்கள், அப்பா?"" என்று கேட்டாள்." "நான், ""ஒரு நிமிடம், கண்ணே"" என்றேன்." "76  நான் அந்தப் பழைய அப்போஸம் இருந்த இடத்திற்கு வெளியே சென்றேன், இது உண்மை என்று பரலோகத்திலுள்ள தேவன் அறிவார். நான் அந்தப் பழைய அப்போஸத்தின் அருகில் நின்றேன்; நான் சொன்னேன், ""அன்புள்ள பரலோகப் பிதாவே, உமது ஏழை ஊழியன் மிகவும் முட்டாளாக இருப்பதால் நான் அதை உணரவில்லை என்றால், நீர் அன்பான தேவன், தன் குட்டிகள் மீதான அன்பினாலும் அவற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் வந்த ஒரு அறிவற்ற விலங்கை நீர் வழிநடத்தினீர், நீர் அவற்றை இங்கே வழிநடத்தினீர், நான் அவளுக்காக ஜெபிக்கத் தவறிவிட்டேன். என்னை மன்னிக்கும்படி நான் உம்மிடம் கேட்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீர் அவளை வாழ விடும்படி நான் அன்புள்ள பரலோகப் பிதாவைக் கேட்டுக் கொள்கிறேன்.""" "நண்பர்களே, இது உண்மை என்று பரலோகத்திலுள்ள தேவன் அறிவார், அந்தப் பழைய அப்போஸம் திரும்பி என்னைப் பார்த்தது, எழுந்தது, தன் குட்டிகளைத் தன் பைக்குள் வைத்தது, ""நன்றி, ஐயா"" என்று சொல்வது போல என்னைத் திரும்பிப் பார்த்தது. அந்த வாலை காற்றில் தூக்கிக்கொண்டு, நேராகக் கேட் வரை நடந்து சென்று, ""போய் வருகிறேன் ( good-bye) "" என்பது போலத் திரும்பி, நேராகக் காட்டிற்குள் நடந்து சென்றது, அவள் காலில் ஒரு நொண்டல் கூட இல்லை. அது சரி... நேராகக் கீழே சென்றது..." 77   ஓ, அவர் நடத்துகிறார். ஆத்துமா இல்லாத ஒரு ஊமையான அப்போஸத்தை தேவனால் விட்டு-நடத்த முடியுமானால், பரிசுத்த ஆவியினால் பிறந்த ஒரு ஆணை அல்லது பெண்ணை அவர் இன்னும் எவ்வளவு அதிகமாக நடத்துவார்? அது எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது, நோயுற்ற மக்களுக்காக ஜெபிக்கக் தேவன் என்னிடம் சொன்னார், அந்த நேரத்தில் மட்டுமல்ல, பல சமயங்களில் அவர் விலங்கு களையும் மற்றவைகளையும் அனுப்பினார், சிலவற்றை நேராக என்னிடம் காடுகளுக்கும் மற்றும் அது போன்ற இடங்களுக்கும் அனுப்பினார். அது உண்மை. தேவனுக்கு அது தெரியும். "சற்று காலத்திற்கு முன்பு, எனக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்தன. திரு. போஸ் மற்றும் அவர்களில் பலர் தங்கள் பத்திரிகையில் இதை வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கதையைப் படித்திருக்கலாம். நான் சற்று காலத்திற்கு முன்பு கலிபோர்னியாவில் இருந்தேன், ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் ஒரு நபர் சிறிய நாற்காலியின் மீது நின்று கொண்டு, ""அப்போஸம் கதைக்கு இந்த வழியாகச் செல்லுங்கள். அப்போஸம் கதைக்கு இந்த வழியாகச் செல்லுங்கள்"" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்." "உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் எனக்குக் கடிதம் எழுதி, ""சகோதரர் பிரான்ஹாம், அந்த அப்போஸத்திற்குச் செய்தது போல எனக் காகவும் ஜெபியுங்கள்"" என்று சொல்கிறார்கள்." 78  இப்போது, ​​கவனியுங்கள். அப்போ ஸத்திற்கு ஆத்துமா இல்லை; அது உள்ளு ணர்வால் ( instinct) பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் பரிசுத்த ஆவியானவர் அதைக் காட்டிலிருந்து, சாலை வழியாக, அதன் குறுக்கே நடத்தி, அதை வாசலுக்குள் கொண்டு வர வேண்டியிருந்தது. உள்ளுணர்வு ஒரு அப்போஸத்தை நடத்த முடியுமானால், பரிசுத்த ஆவியானவர் இன்று இரவு நமக்கு என்ன செய்ய வேண்டும்? நாம் தேவனுடைய ஆவியால் நடத்தப் படுகிறோம். நாம் நம் தலைகளைத் தாழ்த்தும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. பரலோகப் பிதாவே, பல்வேறு அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலம் உமது மக்களுடன் நீர் எப்படி இடைப்பட்டீர் என்ற பல நிகழ்வுகளுக்கு இப்போது என் மனம் செல்கிறது. நிச்சயமாக, சிட்டுக்குருவிகள் எங்கே இருந்தன என்று உமக்குத் தெரியும். இரண்டு காசுக்கு விற்கப்படும் சிட்டுக்குருவிகளில் ஒன்றுகூடத் தரையில் விழாது என்று நீர் சொன்னீர், ஆனால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தது. ஆனால் நீர் சிட்டுக் குருவியை அறிந்திருந்தீர். அப்போஸ்தலர்களின் தலைமுடிகள் கூட எண்ணப்பட்டிருக்கின்றன என்று நீர் சொன்னீர். ஒவ்வொரு விலங்கையும் நீர் அறிந்திருந்தீர், ஒவ்வொன்றும்... நீர் எல்லாம்-எல்லாம் ஜீவனாக இருக்கிறீர், ஆண்டவரே. உமக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. நீர் சர்வஞானியும் ( omniscient) , சர்வவியாபியும் ( omnipresent) , சர்வவல்லமையுள்ளவருமாய் ( omnipotent) இருக்கிறீர். நீர்... நீர் முடிவற்றவர் ( infinite) . ஓ தேவனே, எங்கள் சிறிய வரையறுக்கப் பட்ட மனதினால் சில நேரங்களில் நீர் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது, ஆனால் ஆண்டவரே, எங்களால் பகுத்தறிய முடியாவிட்டாலும், சரியாகத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், எப்படியும் நாங்கள் உம்மை நம்புகிறோம். 79   எனவே, பிதாவே, இன்று இரவு நீர் அற்புதமான வழியில் ஆசீர்வதிக்கும்படியும், நீர் மரித்தோரிலிருந்து எழுப்பிய உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பவுலுக்குத் தோன்றிய அதே ஒளியின் ரூபத்தில், நம் மத்தியில் வரும்படியும் நாங்கள் ஜெபிக்கிறோம்; தான் துன்புறுத்திக் கொண்டிருப்பது இயேசுதான் என்று பவுல் சொன்னார். அந்த ஒளி பிரகாசித்தது, அது அப்போஸ்தலரின் கண்களைக் கிட்டத்தட்டக் குருடாக்கியது. அவர் அதற்காக நீண்ட காலம் அவதிப்பட்டார். ஆண்டவரே, வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரருடன் இருந்த அதே ஒளி, நீர் உலகத்தில் மூன்று முறை அதுபோலத் தோன்றினீர்: ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்கு, ஒருமுறை புதிய ஏற்பாட்டில், இதோ இன்றும் அதே காரியங்களைச் செய்து, நீர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தீர் என்பதற்குத் தவறாத ஆதாரமாக இருக்கிறீர். 80   நீர் விலங்குகளைப் பற்றிக் கரிசனை உள்ளவராக இருக்கிறீர். அந்தப் பழைய அப்போஸம் ஜெபிக்கப்படுவதற்காக அங்கு வரும்படி நீர் அதை மதித்து, அதை நேசித்தீராகில், ஆண்டவரே, ஓ தேவனே, நீர் யாருக்காக மரித்தீரோ அந்த ஆண்களையும் பெண்களையும் இன்று இரவு எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்கள். ஓ, நீர் விலங்கு சாம்ராஜ்யத்திற்காக மரிக்கவில்லை; ஆண்க ளையும் பெண்களையும் இரட்சிப்பதற்காக நீர் மரித்தீர். ஆனால் நீர் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதையும், நீர் எவ்வளவு-எவ்வளவு பெரியவர் என்பதையும் காட்டுவதற்காக, நீர் இந்தக் காரியங்களை உதாரணங்களாகச் செய்கிறீர். ஓ, வழியில் நின்ற தேவதூதரைப் பார்க்க முடியாத ஒரு தீர்க்கதரிசியிடம் நீர் ஒருமுறை கோவேறு கழுதையின் மூலமாகப் பேசினீர். பிதாவே, நீர் எவ்வளவு அற்புதமானவர். அப்போஸ்தலர் வரியைச் செலுத்தும்படி, ஒரு மீன் தன் வாயில் ஒரு நாணயத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு (கரைக்கு) வரும்படி நீர் செய்தீர். ஆண்டவரே, ஓ தேவனே, நீர் மிகவும் உண்மையானவர். நகைச்சுவை உணர்வும், மிகவும் நாடகத் தனமாகவும், உம்மிடம் மிகுந்த அன்பு இருக்கிறது, பிதாவே. எங்கள் முழு இருதயத்தோடும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம். 81   இன்று இரவு இயேசு வரும்படி நாங்கள் இப்போது ஜெபிக்கிறோம். ஆண்டவரே, தகுதியற்ற உமது இந்த ஏழைத் தாழ்மையான ஊழியன், மக்களுக்கு இந்தக் காரியங்களைக் காண்பிக்கும்படி நீர் எனக்குக் கொடுத்துள்ள ஆவிக்குரிய வரங்களுக்கு என்னை ஒப்புக்கொடுக்கக் கூடும். மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் காண்பித்தது போல, வீட்டுக்குப் போகும் நேரம் வந்துவிட்டது என்று நீர் சொன்னீர். உமக்கு நன்றி, ஆண்டவரே. இது வீட்டுக்குப் போகும் நேரம். மோசே தனது அடையாளங்களைச் செய்தபோது, ​​அது வீட்டுக்குப் போகும் நேரமாக இருந்தது. இப்போது வீட்டுக்குப் போகும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை நாங்கள் அறிவோம். நீர் உமது மக்களை அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆண்டவரே, இன்று இரவு நீர் பாவிகளின் இதயங்களோடு பேசி அவற்றை உடைக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். ஏனென்றால் நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 82   இப்போது, ​​ஆண்டவர் வந்து அபிஷேகம் செய்தால்... என் அன்பான சகோதரர்களுக்கும், கூட்டத்தில் எங்களுக்கு உதவ ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும், மற்றும் சிறந்த கிறிஸ்தவ வர்த்தகர்களாகிய உங்களுக்கும் நன்றி. நான் உங்களுடன் இருப்பதற்காகத் தேசம் முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பறந்து செல்கிறேன். நீங்கள் மிகவும் நல்லவர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்குள்ள உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகள் ( laity) அனைவருக்கும், நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன். ஒருவேளை இன்று இரவு அவர்கள் எனக்காக ஒரு அன்பு காணிக்கையை ( love offering) எடுத்திருக்கலாம். நீங்கள் வழக்கமாகச் செய்கிறீர்கள். பரவாயில்லை. நீங்கள் அப்படிச் செய்திருந்தால், நான் சாப்பிடுவதற்கும் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்கும் இல்லாதவற்றை, நான் அதை அயல்நாட்டு மிஷன்களுக்குக் கொடுக்கிறேன். தேவனுடைய மகிமைக்காக என் அறிவுக்கு எட்டிய வரையில் சிறந்த முறையில் நான் அதைக் கொடுப்பேன். கிறிஸ்தவ வர்த்தகர்களே, மறுநாள் உங்கள் காணிக்கைக்காக நன்றி, இன்று கடிதத்தில் அது கிடைத்தது. மிக்க நன்றி. எனக்குத் தெரிந்தவரை நான் பயபக்தியுடன் இருப்பேன். சகோதரர் ஜாக் மூர் உங்கள் அனைவருக்கும் தனது மன்னிப்பைத் தெரிவிக்கிறார். "83   அங்கே வரிசையின் கடைசியில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறிய மனிதர்... காலை உணவு கூட்டத்தில் அமர்ந்திருந்த மறுநாள் காலை... நான் சொன்னேன், ""உங்களுக்குத் தெரியும், இன்று காலை நான் ஒரு தரிசனத்தைப் பார்த்தேன். காடுகள் கீழே வந்து கொண்டி ருந்தன, காடுகள் அனைத்தும் வெட்டப்பட்டு, எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.""" "தேவதூதர் என்னிடம், ""இப்போது, ​​நீ ஊழியத்தில் இருந்து பத்து வருடங்கள் ஆகிறது. நீ ஏங்கிக்கொண்டிருந்த பாதை, இப்போது உனக்கு நேராக இருக்கிறது"" என்றார்." "ஓ, என்னே. நான், ""எங்கே? சரியாக அப்போது நான் பார்த்தேன், சகோதரர் மூரைப் பார்த்தேன், அவர் என்னைப் பார்த்தார். 'அம்மா, இதோ என் அம்மா வருகிறார், சகோதரர் பிரான்ஹாம்' என்று அவர் சொன்னார்."" அதனால்தான், வரிசையின் கடைசியில் அந்தச் சிறிய மனிதர் என்று நான் அங்கே சொன்னது நினைவிருக்கிறது...?... [ஒலி நாடாவில் பதிவு இல்லாத இடம்]" 84   அந்தப் பெண்மணி அவதிப்படுகிறார், அவர் மிகவும், மிகவும் பதட்டமாக இருப்பதை நான் பார்க்கிறேன். அவர் இடத்திற்கு இடம் போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஒரு பித்தப்பை ( bladder) பிரச்சனையாலும் அவதிப்படுகிறார். அவருக்கு ஒரு பித்தப்பை நிலைமை ( bladder condition) உள்ளது. அவர் தொடர்ந்து முன்னும் பின்னும் ஒரு கட்டிடத்திற்குச் செல்வதை நான் பார்க்கிறேன். அது ஒரு மருத்துவருடைய இடம். அவர்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து எடுப்பது ஒரு நீர்க்கட்டி ( cyst) . அது முன்னும் பின்னுமாக இருப்பது போல் தெரிகிறது, பல முறை, வாரத்திற்கு வாரம், அவர்கள் சிறிய சிறிய வளர்சிகளுக்காக, அது போன்ற சிறிய நீர்க்கட்டிகளுக்காக அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது ( THUS SAITH THE LORD) . இப்போது நம்புகிறீர்களா, அம்மையாரே? இங்கே ஒரு கணம் வாருங்கள். பாருங்கள், சகோதரியே, தேவனால் மட்டுமே உங்களைச் சுகமாக்க முடியும். அது உங்களுக்காகப் பேசும் என்று இப்போது நீங்கள் நம்புகிறீர்களா? எங்கள் பரலோகப் பிதாவே, பயபக்தியுடன் இதயம் மற்றும் தலை தாழ்த்தி, அவதிப்படும் அந்தச் சிறிய பெண்ணின் மேல் கைகளை வைத்து, உயிர்த்தெழுதலின் இரக்கங்கள் அவளுக்குக் கிடைக்கும்படி கேட்கிறோம். சாத்தானே, நீ இயேசு கிறிஸ்துவின் மூலம் தோற்கடிக்கப்பட்டாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரி சுகமடைவாள் என்ற இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் இப்போது அவளுக்கு அறிவிக்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. நீங்கள் இப்போது சுகமடையப் போகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதை நம்பவில்லையா? இப்போது அதைப் பற்றி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள், இல்லையா? நீங்கள் அப்போதே சுகமானீர்கள். செல்லுங்கள், மகிழ்ச்சியோடு, கர்த்தருக்கு நன்றி சொல்லுங்கள். இப்போது, ​​நீங்கள் அனைவரும் நம்புகிறீர்களா? அது... சரி. இப்போது, ​​உண்மை யில் பயபக்தியுடன் இருங்கள். சுற்றிலும் அசையாதீர்கள் (பார்க்கவும்), ஏனென்றால் அது-அது கூட்டத்திற்கு இடையூறு விளைவிக்கிறது. 85   இப்போது, ​​எனக்கு அருகில் நிற்கும் இந்தப் பெண்மணி எனக்கு அந்நியர். எனக்கு அவரைத் தெரியாது, ஆனால் தேவனுக்கு அவரைத் தெரியும். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களா, அம்மையாரே? நீங்கள்... பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில் நடக்கும்போது மக்களின் முகபாவனையை ( expression) கவனியுங்கள். பார்க்கவும்? அவள் கன்னங்களில் கண்ணீர் வழிவதைப் பாருங்கள், அவர்கள் நிறம் எப்படி மாறுகிறது என்பதைக் கவனியுங்கள். பார்க்கவும்? அவர்கள் அவருடைய பிரசன்னத்திற்குள் நடக்கும்போது... "ஷவானோவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இன்று என்னைச் சந்தித்தார். அவர் மறுநாள் இரவு கூட்டத்தில் இருந்தார், பியானோ வரை வந்தார். அவர் சொன்னார், ""நீங்கள் வரிசையை நிறுத்தினீர்கள், ஆனால், சகோதரர் பிரான்ஹாம், தேவனுடைய பிரசன்னத்திலிருந்து அவ்வளவு நெருக்கத்தில்,"" சொன்னார், ""அது முடிந்து விட்டது."" சொன்னார், ""என் மீது இருந்த ஒரு வளர்ச்சி ஏற்கனவே என்னை விட்டு நீங்கி விட்டது, உலர்ந்து போய்விட்டது."" பார்க்கவும்? அவர் நம்பினார்." இப்போது, ​​வேறொருவர் அங்கே நடக்கலாம், அவர்களுக்கு அது ஒருபோதும் நடக்காது, அவர்களைச் சிறிதும் தொடாது. பார்க்கவும்? "86   அந்தப் பெண் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டார், வல்லமை புறப்பட்டது. ஆனால் ரோமானியன் அவர் முகத்தில் துப்பி, அவர் தாடியைப் பிடித்து இழுத்து, அவரைத் தலையில் குச்சியால் அடித்து, ""இப்போது, ​​நீர் தீர்க்கதரிசியானால், உம்மை அடித்தது யார் என்று சொல்லும், நாங்கள் உம்மை நம்புவோம்"" என்று சொன்னானே, அவன் எந்த வல்லமையையும் உணரவில்லை. அவன் எதையும் எதிர்பார்க்க வில்லை. விசுவாசித்து வாருங்கள்." இப்போது, ​​சகோதரியே, நான்-நான்... உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நீங்கள் அப்படியிருக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. நான்... உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து, நான் உங்களைச் சுகமாக்க முடிந்தும் அதைச் செய்யா விட்டால், நான் ஒரு மிருகமாக இருப்பேன். உங்களுக்கு உதவ என்னால் எதையாவது செய்ய முடிந்தும், என்னால் அதைச் செய்ய முடியா விட்டால், நான் ஒரு பண்புள்ள மனிதனாகக் ( gentlemen) கூட இருக்க மாட்டேன். நான்-நான்-என்னால் முடியாது, ஏனென்றால் நான் ஒரு... முதலாவதாக, நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. என்னால் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாது. நான் மருத்துவர் அல்ல. அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் இருப்பது தேவனுடைய ஊழியன் மட்டுமே. எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு தெய்வீக வரத்தின் மூலம் உங்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டு வர முயற்சிப்பதன் மூலம், சரி, ஒருவேளை அப்போது ஏதோ ஒன்று நடக்கலாம். அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்கள். நீங்களும் நம்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். 87  இப்போது, ​​முதல் விஷயம், அந்தப் பெண்மணி ஒரு மிகப்பெரிய நரம்பு சம்பந்தப்பட்ட நிலையினால் ( nervous condition) அவதிப்படுகிறார். அவர் ஒரு மனச் சிதைவின் ( breakdown) விளிம்பில் இருக்கிறார். அவர் தன் மனதை இழப்பது போல் உணர்கிறார். இதற்குக் காரணம் ஒரு பாரம். அவர் ஒருவரைக் குறித்துப் பாரத்தோடு இருக்கிறார். அவர் இதயத்தில் ஒரு பாரம் இருக்கிறது. அந்த நபர் அவருடைய கணவர். அந்த மனிதருக்கு வாதம் ( stroke) அல்லது ஏதோ ஒன்று தாக்கியுள்ளது, அது அவரைத் தொந்தரவு செய்கிறது. அவர் அவருடன் அலைகழிக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கு ஒரு மனச் சிதைவை ( breakdown) ஏற்படுத்தியிருக்கிறது. அதுதான் உண்மை. அது சரியா? அது அப்படியானால், உங்கள் கையை உயர்த்துங்கள். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? பாருங்கள். சாத்தான்... இப்போது, ​​நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். பார்க்கவும், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்ட உடனேயே, அந்த உணர்வு உங்களை விட்டு நீங்கியது. பார்க்கவும்? அது இப்போது போய்விட்டது. அது சரி. பார்க்கவும்? இப்போது நீங்கள் அதை உணரவில்லை, இல்லையா? அது உங்களை விட்டுப் போய்விட்டது. அது சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள், அந்தச் சோர்வான உணர்வு உங்களை விட்டு நீங்கியிருந்தால். பார்க்கவும்? பார்க்கவும்? அது விலகியபோது நான் அதைப் பார்த்தேன். பார்க்கவும்? ஆனால் அது ஒரு நிழல் மட்டுமே. இப்போது, ​​அது-அது உங்களைக் காயப்படுத்த முடியாது. அது பிசாசு. பார்க்கவும்? நீங்கள் நம்பினால் அவன்-அவன்-அவன் இனி உங்களிடம் வரமாட்டான். 88   உங்கள் வாழ்நாள் முழுவதும் அவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும் ஒரு அமானுஷ்யமான நபரான இயேசு கிறிஸ்துவுக்கு அருகில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் இங்கிருந்து மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் சென்று... கர்த்தருக்குள் களிகூரப் போகிறீர்கள். அதை நீங்கள் நம்புகிறீர்களா? "அப்படியானால் பரலோகப் பிதாவே, இந்தச் சிறிய பெண்ணின் மேல் நான் கைகளை வைக்கிறேன். நான் சாத்தானிடம் சொல்கிறேன், ""நீ அவளிடம் பொய் சொன்னாய், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளிடமிருந்து விலகி இரு. நீ தோற்கடிக்கப்பட்டாய், உயிருள்ள தேவனால் அவளை விட்டு வெளியேறும்படி நாங்கள் உனக்கு ஆணையிடுகிறோம்."" ஆமென். இப்போது, ​​மகிழ்ச்சியோடு செல்லுங்கள், அம்மையாரே, மகிழ்ச்சியாக இருங்கள், உங்களால் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருங்கள், பாடல்களைப் பாடி தேவனைத் துதியுங்கள். நீங்கள் நலமாக இருப்பீர்கள். ஆமென்." "நீங்கள் நம்புகிறீர்களா? [சபையினர் ""ஆமென்"" என்கிறார்கள்]" "அம்மையாரே, நன்றி. இயேசு சொன்னார், ""உன்னால் கூடமானால்... விசுவாசிக்கிற வனுக்கு..."" அது சரியா? நீங்கள் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளலாம். அது சரியா?" 89   பழுப்பு நிற கோட் அணிந்திருக்கும் சகோதரியே, நீங்கள் அப்போது அதை உணர்ந்தீர்கள், இல்லையா? உங்கள் மூட்டு வலி ( arthritis) உங்களை விட்டு நீங்கியது. அதுதான் நடந்தது. அது சரி. அங்கே அமர்ந்து, தனது தலைமுடியை இப்படி மேலே வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள், உங்களுக்கு மூட்டு வலி இருந்தது, இல்லையா? அது சரி. ஆமென். இப்போது, ​​நான் பார்த்தபோது, ​​திடீரென்று உங்களைச் சுற்றி ஏதோ ஒன்று நடந்தது. அது சரிதானே? அது சரி என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். பார்க்கவும்? பார்க்கவும்? அது நடந்தது. ஆமென். ஐயா, அது உங்களுக்கு நன்றாகத் தெரிகிறதா? அது கர்த்தராகிய இயேசு என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முதுகில் ஏதோ கோளாறு இருக்கிறது, இல்லையா? ம்ம்-ஹூம். அது சரி. அது சரிதானே, ஐயா? நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? இங்கே இன்னொரு விஷயம். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைத் தேடுகிறீர்கள், இல்லையா? அது சரிதானே? அது சரி என்றால், உங்கள் கையை இப்படி முன்னும் பின்னும் ஆட்டுங்கள். அப்படியானால் ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுப்பார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, உமது கிருபையும் இரக்கமும் எங்கள் சகோதரன் மேல் ஆழமாகத் தங்கி, அவருடைய இருதயத்தின் விருப்பத்தை அவருக்குக் கொடுப்பீராக. அவருடைய விசுவாசம் உம்மைத் தொட்டது, ஆண்டவரே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் அதைப் பெற்றுக்கொள்வாராக. ஆமென். பயப்பட வேண்டாம், சகோதரரே. 90   இயேசு... அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தாரா? பார்க்கவும், அந்தப் பெண்ணுக்கு இருந்த அதே விசுவாசம், அந்த மனிதருக்கும் அந்தப் பெண்மணிக்கும் இருந்தது. பார்க்கவும்? அது அதே கர்த்தராகிய இயேசுதான். அவர்-அவர் தோற்பதில்லை. அவர் மாறாதவர். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும். "அம்மையாரே, உங்கள் முழு இருதயத் தோடும் நம்புகிறீர்களா? உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தேவன் எனக்குத் தெரியப்படுத்தினால், தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் நம்புவீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? சரி. என்னைப் பாருங்கள். நான் சொல்வது என்னவென்றால், பேதுருவும் யோவானும் அலங்கார வாசல் வழியே செல்லும்போது, ​​""எங்களைப் பார்"" அல்லது ""எங்களை உற்றுப்பார்"" என்று சொன்னது போல. பார்க்கவும்? வேறு வார்த்தைகளில் சொன்னால், ""ஒரு கணம் உங்கள் கவனத்தை எனக்குக் கொடுங்கள்."" அதைத்தான் நான் சொல்கிறேன். இயேசு அந்தப் பெண்ணிடம் சொன்னது அதுதான்." 91  சரி, உங்களுக்கு ஒரு வளர்ச்சி ( growth) இருக்கிறது. அதைக்கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் அது கழுத்திலும், கன்னத்திலும் உள்ளது. அது உங்கள் இடது பக்கத்தில் உள்ளது. அது சரியா? சரி. செல்லுங்கள், இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். தேவனே, இயேசுவின் நாமத்தில், நாங்கள் இந்த எதிரியைச் சபிக்கிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. செல்லுங்கள், விசுவாசம் வையுங்கள்; நம்புங்கள். சகோதரியே, ஒரு கணம் எழுந்து நிற்பீர்களா? "நீங்கள் அவரை நம்ப முடிந்தால் நம் ஆண்டவராகிய இயேசு எவ்வளவு அற்புத மானவர். ""விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்"" என்று வேதம் சொன்னது." அம்மையாரே, நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று கர்த்தராகிய இயேசு எனக்குத் தெரியப் படுத்தினால், நீங்கள் தேடுவதைப் பெறுவதாக அவரை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? உங்களுக்குப் பல காரியங்கள் உள்ளன. ஒரு விஷயம், உங்களுக்குப் பெருங்குடல் ( colon) பிரச்சனை உள்ளது. உங்களுக்குப் பித்தப்பை ( gallbladder) பிரச்சனை உள்ளது. நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள். அது சரி. பின்னர் உங்களைத் தொந்தரவு செய்யும் ஒரு பெரிய விஷயம் பிசாசின் ஒடுக்குமுறை. பிசாசு உங்களைப் பிடித்திருப்பது போலவோ அல்லது அது போன்ற ஏதோ ஒன்று போலவோ நீங்கள் எப்போதும் மனச்சோர்வடைந்திருப்பதை உணர் கிறீர்கள். நீங்கள் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தை எதிர்கொள்கிறீர்கள், இல்லையா? அது உண்மையா? குறிப்பாக மதிய வேளையில், மதிய உணவுக்குப் பிறகு அல்லது மதிய வேளையில் அது போன்ற சமயங்களில் உங்களுக்கு அது வருகிறது. அது காலையில் இருப்பதை விட மோசமாக இருக்கிறது. அது சரி, ஏனென்றால் அது உங்களை மிகவும் நிலைகுலையச் செய்கிறது. பார்க்கவும்? 92   அது என்னவென்றால், அது நரம்பு தளர்ச்சி ( nervousness) . பார்க்கவும்? அது அதை ஏற்படுத்தியது. ஒரு எதிரி உங்களுடன் சண்டையிடுவது போல் தெரிகிறது. அதை உங்களிலிருந்து துரத்திக் தேவன் என்னை அனுப்பினார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? இங்கே வாருங்கள். உங்கள் தலையைத் தாழ்த்துவது நல்லது. எங்கள் பரலோகப் பிதாவே, உமது பரிசுத்த ஆவிக்கு எதிராக வர முயற்சிக்கும் சாத்தானே, ஏன், தீயவனே, அவளை விட்டு வெளியேறு, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளை விட்டுப் போகும்படி நான் உனக்கு ஆணையிடுகிறேன். சாத்தானே, நீ அம்பலப்படுத்தப்பட்டாய். இந்தப் பெண்ணை விட்டுப் போ. நீ அவளைத் தற்கொலை ( suicide) செய்து கொள்ளத் தூண்டுகிறாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ அவளை விட்டு விலகு. இப்போது, இங்கே பாருங்கள். இப்போது முடிந்துவிட்டது. ஆம். உங்களுக்கு அது தெரியும். அது சரியா? எல்லாக் கவலையும் நீங்கிவிட்டது என்றால் உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரியா? நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள், இல்லையா? நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள்; எனவே மகிழ்ச்சி யோடும் கர்த்தரைத் துதித்துக்கொண்டும் செல்லுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. """தேவனுக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையினர் ""தேவனுக்கு ஸ்தோத்திரம்"" என்கிறார்கள்] ஓ, என்னே, மக்கள் அவரை எப்படி ஆராதிக்க வேண்டும். அவருக்குத் துதியையும் மகிமையையும் செலுத்துங்கள். அவர் ஆராதிக்கப்படுவதை விரும்புகிறார். இப்போது, ​​உண்மையில் பயபக்தியுடன் இருங்கள்." 93  இது அந்தப் பெண்மணியா? அம்மையாரே, நீங்கள் வருவீர்களா? இப்போது, ​​தயவுசெய்து மிகவும் பயபக்தியுடன் இருங்கள். இன்னும் சிறிது நேரம் மட்டுமே. நீங்கள்... இப்போது, ​​சற்றுப் பொறுங்கள். இப்போது, ​​எல்லோரும் மிகவும் அமைதியாக இருங்கள். இப்போது, ​​இது ஒரு சிறிய குழந்தைக்காக அல்ல, ஆனால் சுற்றிலும் அசையாமல் இருங்கள். பார்க்கவும்? பாருங்கள், இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். பார்க்கவும்? பரிசுத்த ஆவியானவர் என்ன செய்யச் சொல்கிறார் என்பதை நான் கவனிக்கிறேன், பின்னர் அவர் எனக்குச் சொல்வதையே நான் செய்கிறேன். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? சைனஸ் ( Sinus - மூக்குத் தண்டு அழற்சி) தேவனுக்கு ஒரு பிரச்சினை அல்ல, இல்லையா? அவரால் சைனஸை மட்டுமல்ல, அவர் விரும்பும் எதையும் சுகமாக்க முடியும், இல்லையா? நீங்கள் அதை நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம்; சுகமடையுங்கள். ஆமென். ஐயா, நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுக்கு இதயக் கோளாறு இருந்தது, இல்லையா? உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது, இல்லையா? அது உங்களை மிகவும் தொந்தரவு செய்தது. அது சரி. நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போகும் நிலைக்கு மிக அருகில் வந்தீர்கள், இல்லையா? நீங்கள் அந்த நிலையில் போகக்கூடாது, ஏனென்றால் இயேசு கிறிஸ்து உங்கள் இரட்சகராகத் தேவை. நீங்கள்... அது சரிதானே? இப்போது அவரை உங்கள் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிப்பீர்களா? நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டால் உங்கள் கையை உயர்த்துங்கள். அப்படியானால் உங்கள் இதயக் கோளாறு உங்களை விட்டு நீங்கும். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் தெளிவாகிறது. நீங்கள் இப்போது ஒரு கிறிஸ்தவர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர். ஆமென். 94  எல்லாவற்றையும் நமக்கு இலவசமாகக் கொடுக்கிற உயிருள்ள தேவனுக்குத் துதி உண்டாவதாக. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். அம்மையாரே, அவருக்குப் பின்னால் உங்கள் கையை உயர்த்தினீர்களே, அந்தக் கண்டமாலை ( goiter - கழுத்துக்கழலை) உங்களை விட்டு நீங்கியது என்று நீங்கள் நம்புகிறீர்களா? இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? சரி. அது முடிந்தது. அது போய்விட்டது. ஆமென். இதோ, அதன் அறிகுறி கூட இல்லை. "ஆண்டவர் எப்படிச் செய்கிறார் என்று பார்க்கிறீர்களா? நீங்கள் நம்பவில்லையா? ஆமென். ""உன்னால் கூடமானால், விசுவாசிக் கிறவனுக்கு எல்லாம் கூடும்"" என்று வேதம் சொன்னது." அங்கே பின்னால் அமர்ந்து உங்கள் வாயின் மேல் கை வைத்துக்கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய பெண்ணே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு இதயக் கோளாறு இருக்கிறது, இல்லையா? ம்ம்-ஹூம். உங்களுக்குக் கொஞ்சம் இரத்த அழுத்தமும் இருக்கிறது. அம்மையாரே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லேலூயா. 95   ஓ, அவர் அற்புதமானவர் இல்லையா? ஓ, அங்கே பின்னால் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருக்கும் அந்த நபரின் மேல் ஒரு மரண ஆவி, உண்மையான கருப்பு நிறத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்; அது இங்கே என்னை நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் புற்றுநோய் உள்ள ஒரு பெண்மணி, அந்தச் சிறிய மெலிந்த பெண்மணி. அம்மையாரே, அவர் உங்களைச் சுகமாக்கினார் என்று நம்புகிறீர்களா? உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் அப்போது ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், இல்லையா? அந்தக் கருப்பு நிறம் முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக உயர்வதை நான் பார்த்தேன். அல்லேலூயா. அவரை நம்புங்கள். அது இப்போது உங்களைச் சுற்றிலும் இருக்கிறது. நீங்கள் இப்போது நம்புகிறீர்களா? எல்லாம் கூடும். இப்போது விசுவாசம் வையுங்கள். பய பக்தியுடன் இருங்கள். நம்புங்கள். சந்தேகிக் காதீர்கள். தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். உங்களுக்குத் தேவையானது எதுவோ, தேவன் அதை நிறைவேற்றுவார். அவர் அதைச் செய்வார். ஆமென். 96   உங்கள் கையில் ஜெப அட்டையை வைத்திருக்கும் அம்மையாரே, அந்தப் பெண்மணியைத் தொடுங்கள். அவர் இப்போது என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், அங்கே இடையில். அந்த உயர் இரத்த அழுத்தத்திற்காக நீங்கள் அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது... அது சரிதானே? பார்க்கவும்? சிறிய சிவப்புத் தொப்பி அணிந்தி ருக்கிறீர்கள், உங்கள் முகத்தின் மேல் உங்கள் கையை வைத்துக்கொண்டு கைகளைத் தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள், இப்போது அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் உங்களைச் சுகமாக்கினார் என்று நம்புகிறீர்களா? சரி. அப்படியானால் வீட்டிற்குச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவாராக. ஆமென். தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். நம்புங்கள். அம்மையாரே, நீங்கள் நம்புகிறீர்களா? நான் உங்களுக்கு அந்நியன். இயேசு கிறிஸ்து உங்களை அறிவார், இல்லையா? சும்மா நம்புங்கள். ஓ, நான்... நான் இதுபோல பலவீனமடையாமல் இருந்திருந்தால். பார்க்கவும்? நீங்கள்-நீங்கள் இப்போது ஒரு கணம் என்னைப் பாருங்கள். ஓ, சபையில் உள்ள அனைவரும் விசுவாசத்தைப் பெறுகிறார்கள், அது வெறும்... மக்கள் சுகமடைந்து கொண்டே இருக்கிறார்கள், ஆனால் என்னால் முடியவில்லை...?... 97   இங்கே பாருங்கள். நான் ஒரு அந்நியனாக இருந்தால்... தேவன் உங்களை அறிவார், அவர் என்னையும் அறிவார், இல்லையா? தேவனுடைய கிருபையினாலும் உதவியினாலும், உங்கள் பிரச்சனை என்னவென்று நான் உங்களுக்குச் சொன்னால், உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீர்களா? உங்களுக்குப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ( female trouble) இருக்கிறது, பெண்ணுக்குரிய பிரச்சனை. அது நீர்க்கட்டிகள் ( cysts) . உங்களுக்கு நீர்க்கட்டிகள் உள்ளன. அது சரிதானே? அது சரி. அது... அது உண்மை என்று நம்புகிறீர்களா? அது உண்மைதான். ம்ம்-ஹூம். ஆம், அம்மையாரே. இப்போது, ​​நான் உங்களுக்கு இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன். நீங்கள் மினியாபோலிஸைச் சேர்ந்தவர் அல்ல. நீங்கள் விஸ்கான்சின் மாநிலத்திலிருந்து வந்திருக் கிறீர்கள். அது சரி. ம்ம்-ஹூம். உங்கள் பெயர் திருமதி டக்ளஸ் போம் ( Mrs. Douglas Bohm), B-o-h-m . அது சரிதானே? இப்போது, ​​விஸ்கான்சினுக்குத் திரும்பிச் செல்லுங்கள், சுகமாயிருங்கள். "நாம் சொல்வோம், ""கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்."" [சபையினர் ""கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்"" என்கிறார்கள்]" ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? இப்போது, ​​உண்மையில் பயபக்தியுடன் இருங்கள். இன்னும் சில நிமிடங்கள், இன்னும் ஒரு நிமிடத்தில் என்னை அழைத்துச் செல்வார்கள், நீங்கள் பயபக்தியுடன் இருந்தால். நிஜமாகவே அசையாமல் அமருங்கள். மக்களே, நீங்கள் அனைவரும் எழுந்து செல்லும்போது என்னால் கூட்டத்தைக் கையாள முடியாது. தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள். தயவுசெய்து இன்னும் சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். பார்க்கவும்? 98   திரும்பு... இது... நான் உங்களிடம் ஒரு கணம் பேச விரும்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நினைக்கிறேன்? தேவன் மட்டுமே நம் இருவரையும் அறிவார், இல்லையா? அவரால் உங்களுக்காக மிகவும் அதிகமாகச் செய்ய முடியும். அவர் எதைச் செய்தாலும், அது அவருடைய கையில் உள்ளது. அவர் தேவன். அது சரியா? நான் உங்களுக்கு உதவ முடிந்தும் அதைச் செய்யாவிட்டால், நான் ஒரு மாயக்காரனாக இருப்பேன். நான் ஒரு ஏமாற்றுக்காரனாக இருப்பேன். நான் உங்களுக்கு உதவாவிட்டால் நான் ஒரு மிருகமாக இருப்பேன். ஒரு தெய்வீக வரத்தின் மூலம் நான் உங்களுக்கு உதவ முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நிலையினால் அவதிப்படுகிறீர்கள். அது சரி. உங்களுக்குத் தொண்டையில் பிரச்சனை இருக்கிறது. அது சரி. அவர் உங்களைச் சுகமாக்குவார் என்று இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புகிறீர்களா? உங்களுக்கு முன்னால் வேதாகமம் வைக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதிலிருந்து பேசுகிறீர்கள். அவர் இப்போது உங்களைச் சுகமாக்கப் போகிறார் என்று நம்புகிறீர்களா? சரி. அப்படியானால் உங்கள் சபைக்குத் திரும்பிச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்; எப்படியும் நீங்கள் ஒரு பிரசங்கியாராக இருக்கிறீர்கள். எங்கள் பரலோகப் பிதாவே, நீர் எங்கள் சகோதரரை ஆசீர்வதிக்கும்படியும், இயேசுவின் நாமத்தின் மூலம் அவர் கேட்ட இந்தப் பெரிய காரியத்தை அவருக்குக் கொடுக்கும்படியும் நான் ஜெபிக்கிறேன். ஆமென். போய், இப்போது விசுவாசியுங்கள். "99   நீங்கள் நம்புகிறீர்களா? தேவனால் உங்கள் வயிற்றுக் கோளாறைச் சுகமாக்கி எல்லாவற்றையும் சரியாக்க முடியும். அதை நீங்கள் நம்பவில்லையா? அவர் செய்தார். ஆமென். நீங்கள் அதைப் பெற்றுக்கொண்டீர்கள். இப்போது உங்கள் வழியில் மகிழ்ச்சியுடன் சென்று, ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்லுங்கள். ஆமென்." """தேவனுக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம்." "சரி, அம்மையாரே. உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? ஓ, முதுகு வலி...?... உங்களுக்குத் தெரியும், சிறுநீரகங்கள், ஆனால் தேவனால் உங்களைச் சுகமாக்க முடியும், இல்லையா? மகிழ்ச்சியுடன் உங்கள் வழியில் சென்று, ""ஆண்டவராகிய இயேசுவே, சுகத்திற்காக உமக்கு நன்றி"" என்று சொல்லுங்கள்." "சரி. நீங்கள் வருவீர்களா? என்ன சொல்கிறீர்கள்? ஓ, எழுந்து மேலே வர முடியாத அளவுக்கு நீங்கள் மிகவும் நோயாளி. சரி, பரவாயில்லை. அந்தப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட விரும்புகிறீர்களா? சரி. சரி. அப்படியானால் அப்படியே செல்லுங்கள். நீங்கள் விசுவாசித்தால் இனி அது உங்களைத் தொந்தரவு செய்யாது. தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இந்த ஆசீர்வாதம் நம் சகோதரிக்குக் கிடைப்பதாக. ஆமென். செல்லுங்கள் சகோதரி, அது இப்போது போய்விட்டது. மகிழ்ச்சியடைந்து, ""தேவனுக்குத் துதி உண்டாவதாக"" என்று சொல்லிக்கொண்டே செல்லுங்கள்." "100  தேவன் உங்கள் மூட்டு வலி ( arthritis) மற்றும் எல்லாவற்றையும் சுகமாக்குகிறார். நீங்கள் அதை நம்புகிறீர்கள், இல்லையா? உங்களை முழுமையாகச் சுகமாக்குவார்? சரி, அப்படியானால் கீழே சென்று, ""நன்றி ஆண்டவரே"" என்று சொல்லி, என் கைகளை உயர்த்துங்கள், அது அனைத்தும் போய்விடும்...?... சொல்லுங்கள், ""தேவனுக்குத் துதி உண்டாவதாக...?... பிரச்சனை மற்றும் பல, மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை...?... நீண்ட காலமாக, ஆனால் இயேசு கிறிஸ்துவால் உங்களைச் சுகமாக்க முடியும், இல்லையா? அதை நம்புகிறீர்களா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், எங்கள் சகோதரி சுகமாவாராக. ஆமென். இப்போது, ​​உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடனும் செல்லுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். இப்போது நம்புகிறீர்களா?" ஏதோ நடந்தது. யாரோ ஒருவர் அப்போது சுகமாக்கப்பட்டார். நான்... நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அவர் முதுகு வலியைச் சுகமாக்குகிறார். அவர் வயிற்றுக் கோளாறைச் சுகமாக்குகிறார், மற்றும் அவர் நரம்புத் தளர்ச்சியைச் சுகமாக்குகிறார்; அவர் கண்களைச் சுகமாக்குகிறார், மேலும் அவர் எல்லாவற் றிலிருந்தும் உங்களைச் சுகமாக்க முடியும். உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புகிறீர்களா? தேவன் இப்போது அதை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று நம்புகி றீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் நடுக்கமாக உணர்கிறீர்கள், இல்லையா? ஆனால் அது உங்களைக் காயப்படுத்தப் போவதில்லை. அது உங்களுக்கு உதவப் போகிறது. சரி, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். எங்கள் அன்பான பரலோகப் பிதாவே, நீர் எங்கள் சகோதரியை ஆசீர்வதிக்கும்படியும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தத் தீமைகளை அவளிடமிருந்து அகற்றும் படியும் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சரி, இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். 101  இதுதான் நோயாளியா? நீங்கள் நம்புகிறீர்களா? ஒரு கணம் என்னைப் பாருங்கள். சபையில் இடையூறு...?... எனக்குரிய அந்தச் சிறிய அறை எனக்குக் கிடைக்கும்போது நான் மகிழ்ச்சியடைவேன். அவர்கள் அப்போது ஒலிவாங்கி ( microphone) மூலம் மட்டுமே கேட்பார்கள். அம்மையாரே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். எனக்கு உங்களைத் தெரியாது. தேவனுக்கு உங்களைத் தெரியும். ஆனால் நீங்கள் உங்களுக்காக இங்கே நிற்கவில்லை. நீங்கள் வேறொருவருக்காக இங்கே நிற்கிறீர்கள். அது உண்மை, இல்லையா? ஒருவேளை நான் உங்களிடம் ஒரு கணம் பேசினால், உங்களைப் பற்றிப் பேசினால், அல்லது பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்வார் என்று பார்ப்பதற்காக வேறு எதுவாக இருந்தாலும். நீங்கள் நம்புவீர்களா? சபை நம்புமா? சபை... எனக்குத் தாமதமாகிவிட்டது, அது அமைதியற்றதாகிறது. மக்கள் நேரத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு எதிராகச் செயல்படுவதை நான் உணர்கிறேன். பார்க்கவும்? அது மிகவும் கடினமாக இருக்கிறது, அது என்னைக் கீழே, கீழே, கீழே, என்று வேகமாகக் கீழே கொண்டு செல்கிறது. 102   இப்போது, ​​இந்தப் பெண்மணியை எனக்கு நேராக நிறுத்துங்கள், அப்போதுதான் நான் அவருடன் பேச முடியும். நீங்கள் வேறொருவருக்காக நிற்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், அந்த நபர் ஒரு வயதான பெண்மணி. அவர் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்குப் பக்கவாதம் ( stroke) வந்திருக்கிறது. அவர் உங்கள் தாய். மேலும் அவரைப் பற்றி இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு கார் அவரை மோதியதை நான் பார்க்கிறேன். அவர் ஒரு கார் விபத்தில் சிக்கியிருந்தார், இல்லையா? அது சரி. இப்போது உங்களுக்கு அருகில் ஒருவரைப் பார்க்கிறேன். அது ஒரு ஆண். அது உங்கள் கணவர். அவர் இங்கே இருக்கிறார். அவருக்கு முதுகு வலி இருக்கிறது, இல்லையா? இப்போது நம்புகிறீர்களா? செல்லுங்கள், அந்தக் கைக்குட்டையை அவர் மேல் வையுங்கள். அவர் குணமடைவார். ஓ தேவனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நீர் இந்த ஆசீர்வாதங்களை அருளும்படி நான் ஜெபிக்கிறேன். ஆமென். 103   எப்படி இருக்கிறீர்கள்? இப்போது விசுவாசம் வையுங்கள். இன்னும் ஒரு கணம் பயபக்தியுடன் இருங்கள். அம்மையாரே, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? நீங்களும் வேறொருவருக்காக நிற்கிறீர்கள், இல்லையா? நான் கர்த்தராகிய இயேசுவின் ஊழியன் என்று நம்புகிறீர்களா? நீங்கள் யாருக்காக நிற்கிறீர்களோ அந்த நபர் மிகவும், மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அது இருளால் சூழப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மேல் மரணம் இருக்கிறது. அந்த நபர் புற்றுநோய் என்னும் கொடிய நோயால் அவதிப்படுகிறார். அந்த நபர் இங்கே வசிக்கவில்லை. இங்கிருந்து தூரத்தில் இருக்கிறார். அது ஒரு அழகான நகரம், அந்த நகரம் கடற்கரையோரம் உள்ளது. துறைமுகத்தில் நிறையக் கப்பல்கள் உள்ளன. அது சான் டியாகோ, கலிபோர்னியா. அது சரி. அது சரி. நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் நம்ப முடிந்தால், நீங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்ளலாம். 104   நீங்களே எதையோ கேட்கிறீர்கள். அது ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நிலை மற்றும் உங்கள் கண்களுக்காக. அது சரி. ம்ம்-ஹூம். நீங்களும் கலிபோர்னியாவிலிருந்து வந்திருக் கிறீர்கள். அது சரி. மேலும் நீங்கள்... நீங்கள் ஒரு கவிஞர் அல்லது அது போன்ற கவிதைகளை எழுதுபவர், இல்லையா? அது சரி. நீங்கள் வசிக்கிறீர்கள்... உங்களுக்கு 1225 ஹூவர் ஸ்ட்ரீட், நேஷனல் சிட்டி, கலிபோர்னியா ( 1225 Hoover Street, National City, California) என்ற முகவரி உள்ளது. உங்கள் பெயர் சோபியா. அது சரிதானே? டாம்சல் ( Damsel) என்பது உங்கள் கடைசிப் பெயர். அது உண்மை. உங்கள் வழியில் சென்று சர்வவல்லமையுள்ள தேவன்...?... பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகி றீர்களா? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரில் நான் அதை அறிவிக்கிறேன். அவர் இங்கே இருக்கிறார் என்றும், இங்கிருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகமாக்க முடியும்-சுகமாக்கிவிட்டார், (இறந்த காலம்), என்றும் நீங்கள் நம்புகிறீர்களா? அதை நம்பி ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா? உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் வையுங்கள். 105   ஓ தேவனே, எங்கள் பிதாவே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்தக் கணத்தில், தெய்வீகப் பிரசன்னத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் நீர் சுகமாக்கும் படியும், ஒவ்வொரு பொல்லாத ஆவியையும் துரத்தும்படியும் நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சுகமாக்கும் வல்லமை இப்போது இந்தச் சபையின் மேல் இறங்கி, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்குவதாக. சாத்தானே, நாங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு உன்னைத் துரத்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீ தோற்கடிக்கப் பட்டாய். இயேசுவின் நாமத்தில் கிறிஸ்து எல்லாரையும் சுகமாக்குவாராக. எழுந்து நின்று உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.